இந்திய டென்னீஸ் வீரரான சானியா மிர்சாவிற்குச் சேவை வரித்துறை, சேவை வரி செலுத்தாத காரணமாக அல்லது வரி ஏய்ப்பு செய்தற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய டென்னீஸ் வீரரான சானியா மிர்சாவிற்குச் சேவை வரித்துறை, சேவை வரி செலுத்தாத காரணமாக அல்லது வரி ஏய்ப்பு செய்தற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 6ஆம் தேதி சேவை வரி அலுவலகத்தின் தலைமை ஆய்வாளர், டென்னீஸ் வீரரான சானியா மிர்சாவிற்குச் சமன் அனுப்பியுள்ளார். இதன் படி வருகிற பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி உரியப் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அளிக்க நோட்டீஸ் வாயிலாகச் சானியா மிர்சாவிடம் சேவை வரி செலுத்தப்படவில்லையா அல்லது வரி ஏய்ப்பில் ஈட்டுப்பட்டுள்ளாரா என்பது குறித்து நிதிச் சட்டம் 1994இன் படி விசாரணை செய்யப்படும்.
மேலும் சேவை வரி செலுத்தாத குறித்து அதன் தொடர்புடை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சானியா மிர்சா சேவை வரித்துறை நோட்டீஸை ஏற்று நேரில் ஆஜராகவில்லை என்றாலும், முறையான பதில் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றாலோ ஐபிசி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications