ஜப்பான் நாட்டின் முன்னணி டெலிகாம் மற்றும் முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க், இந்தியாவில் ஓலா, ஸ்னாப்டீல் எனப் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னணி டெலிகாம் மற்றும் முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க், இந்தியாவில் ஓலா, ஸ்னாப்டீல் எனப் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 9 மாத காலத்தில் சாப்ட்பேங்க் தனது இந்திய முதலீட்டில் சுமார் 39.28 பில்லியன் யென் (350 மில்லியன் டாலர்) நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நஷ்ட அளவீடுகள் கடந்த நிதியாண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது குறைவானது.
மேலும் 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நஷ்ட அளவீடுகள் 58.14 பில்லியன் யென் (560 மில்லியன் டாலர்) ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜப்பான் நாணயத்தின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளதாலும், இதன் முதலீடுகள் சில நிறுவனங்களில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் டிசம்பர் முடிவில் இதன் அளவு 39.28 பில்லியன் யென்-ஆகக் குறைந்துள்ளது.
சாப்ட்பேங்க் நிறுவனம் இந்தியாவில் ஒலா நிறுவனத்தில் 210 மில்லியன் டாலர், ஸ்னாப்டீல் நிறுவனத்தில் 627 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது. இதுவே சாப்ட்பேங்க் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகப் பார்க்கப்படுகிறது.
இதுவரை இந்தியாவில் சாப்ட்பேங்க் 2 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது, மேலும் அடுத்த 5-10 வருடத்தில் அதன் முதலீட்டு அளவை 10 பில்லியன் டாலர் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications