பொறுமை இழந்த நாராயண மூர்த்தி.. இன்போசிஸ் நிர்வாகத்திற்கு எதிராகச் சரமாரி குற்றச்சாட்டு..!

நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ், இதன் நிர்வாகம் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய பிரச்சனையைச் சந்தித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை அனைத்துத்

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களின் ஒன்றான இன்போசிஸ், இதன் நிர்வாகம் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய பிரச்சனையைச் சந்தித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை அனைத்துத் தரப்பு மத்தியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் தினசரி பணிகள் இயல்பாக நடக்க வேண்டும் என்பதற்காக, சந்தையில் நிலவும் அனைத்துக் கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இதன் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்திக் கருத்து வெளியிட்டுள்ளார்.

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

முதலில் இந்தப் பிரச்சனை விஷால் சிக்காவிற்குத் தொடர்புடையதல்ல. நிர்வாகக் குழு தனது பணிகளைச் சரியான முறையில் செய்யத் தவறியுள்ளது அதற்காகத் தான் நிறுவனர்கள் குழு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்குச் சிகாவிற்கும் எந்த விதமான சமந்தமும் இல்லை.

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

இன்போசிஸ் நிறுவனத்தின் ஆஸ்தான நிறுவனர்கள் இந்நிறுவனத்தில் வெறும் 12.75 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர். இதில் நாராயண மூர்த்தி அதிகப்படியான அளவு அதாவது 3.44 சதவீத பங்குகளைக் கொண்டு நிறுவனர்கள் குழுவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ஒரு வருடப் பிரச்சனை

ஒரு வருடப் பிரச்சனை

இந்நிலையில் மொத்த நிர்வாகமும் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் சேர்மேன் ஆர். சேஷசாயி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து முடிவுகளில் ஆர். சேஷசாயி தலைமையிலான குழு ஆதிக்கம் செலுத்தும். இங்குத் தான் பிரச்சனை துவங்கியது.

 

வேலை நீக்க ஊதியம்

வேலை நீக்க ஊதியம்

நாராயணமூர்த்திக் கூறுகையில், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சட்ட மற்றும் இணக்கப் பரிவின் தலைவர் டேவிட் கென்னடி பணியில் அமர்த்தியபோது நிறுவனர்கள் யாரும் அதுகுறித்துக் கேள்வி எழுப்பவில்லை, ஆனால் அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய போது severance pay 12மாதம் அளிக்கப்பட்டது ஏற்புடையதல்ல.

பொதுவாக இன்போசிஸ் நிறுவனத்தில் 3 மாதம் மட்டுமே severance pay அளிக்கப்படும்.

 

ராஜீவ் பன்சால்

ராஜீவ் பன்சால்

டேவிட் கென்னடி-ஐ போலவே நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால் வெளியேறிய போது அவருக்கு 30 மாத severance pay அளிக்கப்பட்டது.

இது இயல்பான அளவுகளை விடவும் 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரும் தொகை அளிக்க என்ன காரணம் என்ற கேள்வியைத் தான் எழுப்பியுள்ளோம் என்று கூறினார்

 

ஊழியர்கள் கவலை

ஊழியர்கள் கவலை

ஆர். சேஷசாயி தலைமையிலான நிர்வாகத்தின் இத்தகைய செயலால் நிறுவனத்தின் பல உயர், நடுநிலை மற்றும் ஜூனியர் நிலை ஊழியர்கள் வரை நிறுவனத்தில் நிலவும் பிரச்சனை குறித்துச் சுமார் 1,800 ஊழியர்கள் தனது மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக மூர்த்திக் கூறினார்.

இதில் முக்கியக் கேள்வி என்னவென்றால் நிறுவனத்தில் பணியாற்றும் எங்களுக்கு 80% வேரியபில் பே மட்டுமே கிடைக்கிறது. வெளியேறும் ஊழியர்களுக்கு 100 சதவீதம் வேரியபில் பே கிடைக்கிறது இது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

ஊழியர்கள் தான் முக்கியம்

ஊழியர்கள் தான் முக்கியம்

இந்தப் பிரச்சனைக்கு விரைவான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும், நிறுவனத்தின் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என அவர் கூறினார்.

பொறுமை இழந்த நாராயண மூர்த்தி.. இன்போசிஸ் நிர்வாகத்திற்கு எதிராகச் சரமாரி குற்றச்சாட்டு..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+