இந்திய ஐடி ஊழியர்களே உஷார்..! 25 மில்லியன் ஆப்ரிக்கர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது ஐபிஎம்..!

இண்டர்நேஷனல் பிசினஸ் மெசின்ஸ் கார்ப் வருங்காலத்திற்கான தொழிலாளர்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 மில்லியன் ஆப்ரிக்கர்களுக்கு இலவச டிஜிட்டல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க இருக்கின்றது.

இண்டர்நேஷனல் பிசினஸ் மெசின்ஸ் கார்ப் வருங்காலத்திற்கான தொழிலாளர்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 மில்லியன் ஆப்ரிக்கர்களுக்கு இலவச டிஜிட்டல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க இருக்கின்றது.

அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் தென் ஆப்ரிக்காவில் உள்ளவர்களுக்காக 945 பில்லியன் ரூபாய் வரை செலவு செய்ய இருப்பதாகக் கூறுகின்றது. தென் ஆப்ரிக்காவில் 31 சதவீதத்தினர் வேலை இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற நாடுகள்

பிற நாடுகள்

இத்திட்டத்தினால் நைஜீரியா, கென்யா, மொரோக்கோ மற்றும் எகிப்து நாடுகளும் நன்மைகளைப் பெறும் என்றும் ஆப்ரிக்கா கண்டம் முழுவதும் இதன் மூலம் பயன் அடையும் என்று கூறப்படுகின்றது.

ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

2040-ம் ஆண்டு ஆப்ரிக்காவில் மிகப் பெரிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இதற்காக ஐபிஎம் திறன் மேம்பாட்டு அகாடமியின் தலைவர் ஜுவான் பாப்லோ நாப்போலி தலைமையில் அதிக ஊழியர்களை உருவாகும் பணி நடைபெற்று வருகின்றதது கூறுகின்றனர்.

பயிற்சி

பயிற்சி

கணினி அடிப்படை முதல் மிகப் பெரிய செயலிகள் உருவாக்குவது வரை அனைத்துத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் இலவச கிளவுட் அடிப்படையிலான கற்றல் மேடை மூலம் அளிக்கப்படுகின்றது.

டிஜிட்டல் வேலைவாய்ப்புகள்

டிஜிட்டல் வேலைவாய்ப்புகள்

இந்த முயற்சியின் மூலம் ஆப்ரிக்காவில் டிஜிட்டல் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்றும் இதனால் இந்தியாவிற்குச் செல்லும் வாய்ப்புகள் தடுக்கப்படும் என்று தென் ஆப்ரிக்காவின் ஐபிஎம் நிர்வாகி ஹாமில்டன் ரத்ஷிஃபோலா கூறினார்.

இது வரை 50,000 வேலை வாய்ப்புகள் ஆபிரிக்காவில் இருந்து இந்தியாவிற்குச் சென்றுள்ளதாகவும் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளார்.

 

வேலை வாய்ப்புகள் வெளியே போகாது

வேலை வாய்ப்புகள் வெளியே போகாது

இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலை வாய்ப்புகள் அனைத்தும் ஆப்ரிக்கைவை விட்டு வெளியே போகாது, இதற்குத் திறன் மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

கூட்டு

கூட்டு

நிறுவனம் ஆபிரிக்கா முழுவதும் இந்த முயற்சியை விரிவாக்க ஐக்கிய நாடுகள் கூட்டு சேர்ந்துள்ளது. மொபைல் போன் நிறுவனங்கள், பிற சாத்தியமான கூட்டாளர்கள் போன்ற பலருடன் இணைந்து செயல்பட ஐபிஎம் நிறுவனம் முயன்று வருகின்றது என்று ஹாமில்டன் தெரிவித்தார்.

ஆப்ரிக்காவில் ஐபிஎம்

ஆப்ரிக்காவில் ஐபிஎம்

தென் ஆப்ரிக்காவில் ஐபிஎம் நிறுவனம் வோடாபோன் நிறுவனத்திற்காகத் தங்களது பணிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஐடி ஊழியர்களே உஷார்..! 25 மில்லியன் ஆப்ரிக்கர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது ஐபிஎம்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+