இந்தியாவின் மிகப் பெரிய டாக்ஸி செயலியான ஓலா நிறுவனத்தில் இருந்து தலைமை நிதி அதிகாரி ராஜிவ் பன்சால் வெளியேறுகிறார். இவருடைய பொறுப்பைக் கூடுதலாகப் பல்லவா சிங் பார்ப்பார் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய டாக்ஸி செயலியான ஓலா நிறுவனத்தில் இருந்து தலைமை நிதி அதிகாரி ராஜிவ் பன்சால் வெளியேறுகிறார். இவருடைய பொறுப்பைக் கூடுதலாகப் பல்லவா சிங் பார்ப்பார் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓலா நிறுவனத்தின் மூத்த மார்க்கெட்டின் அலுவலர் ரகுவேஷ் சரூப் அன்மையில் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு அந்து இடத்தை இன்னும் வேறு யாரும் நிரப்பவில்லை.
ராஜிவ் பன்சால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னால் தலைமை நிதி அதிகாரி ஆவார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து இவர் வெளியேறியதை அடுத்துத் தான் நிறுவனர்கள் மற்றும் இயக்குனர்கள் குழு இடையே பெறும் பிளவு ஏற்பட்டது.
ராஜிவ் பன்சால் ஓலா நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணியில் சேர்ந்தார், பின்னர் இவர் எடுத்த முடிவின் பேரில் தான் நிறுவனம் பொது பட்டியலுக்குத் தயாரானது.
இதே காலகட்டத்தில் தான் ரகுவேஷ் சரூப் ஓலா நிறுவனத்தின் பணியில் சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிளிப்கார்ட் நிறுவனத்திலும் நிறுவனர்கள் இருவருக்கும் அதிகாரம் இல்லாத பதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து இதே போன்று மூத்த அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறிவருகின்றனர்.

Click it and Unblock the Notifications