ஆன்லைன் ரியல்எஸ்டேட் சேவை அளிக்கும் நிறுவனமான பிராப்டைகர்-ஐ ஒரு மாதத்திற்கு முன்பு இதே துறையில் கொடிகட்டி பறக்கும் ஹவுசிங்.காம் நிறுவனம் கைப்பற்றியது.
பெங்களுரூ: ஆன்லைன் ரியல்எஸ்டேட் சேவை அளிக்கும் நிறுவனமான பிராப்டைகர்-ஐ ஒரு மாதத்திற்கு முன்பு இதே துறையில் கொடிகட்டி பறக்கும் ஹவுசிங்.காம் நிறுவனம் கைப்பற்றியது.
இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு இந்திய ஆன்லைன் ரியல்எஸ்டேட் சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் எனச் சந்தையில் கருத்து நிலவி வந்த நிலையில், பிராப்டைகர் (PropTiger) நிறுவனம் சுமார் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
200 ஊழியர்கள்
ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான ஹவுசிங்.காம் பல பரிச்சனைகளுக்குப் பின் தனது வர்த்தகத்தை மேம்படுத்தும் திட்டத்துடன் பிராப்டைகர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியது.
இதன் பின் இரு நிறுவனங்களும் வர்த்தகம், நிறுவனத்தில் மறுசீரமைப்பு பணிகளைத் துவங்கியது. இதன் மூலம் வருவாய் அளவுகளை அதிகரிக்கப் பிராப்டைகர் நிறுவனம் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
2 மாத சம்பளம்
இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டு மாத சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துப் பணிநீக்கம் செய்துள்ளது.
பிராப்டைகர்
நியூஸ் கார்ப் முதலீட்டில் இயங்கி வரும் இந்தப் பிராப்டைகர் நிறுவனம், 2015ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் விளம்பர சேவை அளிக்கும் மக்கான்.காம் நிறுவனத்தைக் கைப்பற்றியது. இதன் பல்வேறு மாறுப்பட்ட சேவைகளின் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது.
ஆன்லைன் ரியல் எஸ்டேட்
இந்தியாவில் ஆன்லைன் ரியல் எஸ்டேட் சேவை மக்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், குவிக்கர் போன்ற பல நிறுவனங்கள் இத்துறையில் இறங்கியுள்ளது.
இதன் போட்டியை சமாளிக்க ஹவுசிங்.காம் பிராப்டைகர் நிறுவனத்தை வெளியிடப்படாத தொகைக்கு முழுமையாகக் கைப்பற்றியது.
சில பிரச்சனைகள்
இந்நிலையில் ஹவுசிங்.காம் மற்றும் பிராப்டைகர் நிறுவன இணைப்பில் சில பிரச்சனைகள் உள்ள காரணத்தால், அவற்றை விரைவில் தீர்த்து இணைப்பை விரைவில் முடிக்க இரு தரப்பினரும் முயற்சி செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே இந்தப் பணிநீக்கம்.
2வது முறை
கடந்த 3 வருடத்தில் பிராப்டைகர் நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது இது 2வது முறையாகும். தற்போது 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.



Click it and Unblock the Notifications