தமிழ்நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமமான டிவிஎஸ், ஆட்டோமொபைல் பிரிவுக்கான அலுமினியம் கேஸ்டிங் பணிகளைச் சுந்தரம் - கிலேடன் நிறுவனத்தின் வாயிலாகச் செய்து வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமமான டிவிஎஸ், ஆட்டோமொபைல் பிரிவுக்கான அலுமினியம் கேஸ்டிங் பணிகளைச் சுந்தரம் - கிலேடன் நிறுவனத்தின் வாயிலாகச் செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகச் சேவை அளிக்கும் வகையில் டிவிஎஸ் குழுமத்தின் இப்பிரிவு அமெரிக்காவில் புதிய தொழிற்சாலையைத் துவங்க உள்ளது.
என்ன காரணம்..?
சுந்தரம் - கிலேடன் வர்த்தகப் பிரிவின் 60 சதவீத ஏற்றுமதியும், 40 வருவாயும் அமெரிக்கச் சந்தையை மட்டுமே சார்ந்து இருக்கும் காரணத்தால் புதிய தொழிற்சாலையை அமைக்கச் சுமார் 350 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
50 ஏக்கர் நிலம்
புதிய தொழிற்சாலையை அமைப்பதற்காக அமெரிக்காவின் தென் கரோலினாவின் டார்செஸ்டர் கவுன்டியில் டிவிஎஸ் குழுமம் சுமார் 50 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதற்காக 50 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே இப்பகுதியில் வாங்கப்பட்டுள்ளது.
10,000 டன்
அடுத்த 5 வருடத்தில் இப்புதிய தொழிற்சாலையில் இருந்து சுமார் 10,000 டன் அளவிற்கான பொருட்களை வர்த்தகத்திற்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகச் சுந்தரம் - கிலேடன் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் லக்ஷமி வேணு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் முதலீடு
இந்தியாவில் இருக்கும் இருக்கும் சுந்தரம் - கிலேடன் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது டிவிஎஸ் குழுமம்.
மேலும் அடுத்த 3 வருடத்தில் சுந்தரம் - கிலேடன் பிரிவின் உற்பத்தி அளவுகள் 60,000 டன்னில் இருந்து 70,000 டன்னாக உயரும் எனவும் லக்ஷமி வேணு உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications