டிமேட் கணக்கு என்பது முக்கியமாகப் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காகத் தேவைப்படுகின்றது.
டிமேட் கணக்கு என்பது முக்கியமாகப் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காகத் தேவைப்படுகின்றது. இப்படிப் பட்ட டிமேட் கணக்கிற்கு வருடாந்திர மற்றும் நிர்வகிப்புக் கட்டணங்கள் உண்டு.
ஒரு வேளை நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில்லை என்று முடிவு செய்கின்றீர்களா... அப்படியானால் டிமேட் கணக்கை எப்படி மூடுவது என்று தெரியுமா..?
டிமேட் கணக்கில் பணம் வைத்திருந்தால் அதில் இருக்கும் பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளுங்கள். எப்படி டேமேட் கணக்கை மூடுவது என்று இங்குப் பார்ப்போம்.
தேவையான படிவம் மற்றும் விவரங்கள்
டிமேட் கணக்கு வைத்துள்ளவர்கள் டிபி எனப்படும் முதலீட்டுப் பங்கேற்பாளர் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் இதற்குப் பின்வரும் விவரங்கள் எல்லாம் தேவை.
1. டிபி எனப்படும் முதலீட்டுப் பங்கேற்பாளர் மற்றும் கிளையன்ட் ஐடி
2. பெயர் மற்றும் முகவரி விவரங்கள்
3. கணக்கை மூடுவதற்கான காரணம்.
4. கணக்கை மூடுவதற்கான கோரிக்கை படிவம்
பரிமாற்றம்
டிமேட் கணக்கில் ஏதும் பணம் இருந்தால் டெலிவரி அறிவுறுத்தல் சீட்டு போன்றவற்றைப் பயன்படுத்திப் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
செயல்முறை மற்றும் கட்டணங்கள்
டிமேட் கணக்கை மூடுவதற்கான கோரிக்கையை அளித்த உடன் 7 முதல் 10 வேலை நாட்களில் உங்கள் கணக்கு மூடப்படும். டிமேட் கணக்கை மூடக் கட்டணம் ஏதும் இல்லை.
கவனிக்க வேண்டிய புள்ளிகள்
கணக்கை மூடும் போது நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால் அதனைக் கட்டி முடித்த பிறகே முழுவதுமாகக் கணக்கை மூட முடியும்.
மேலும் பயன்படுத்தப்படாத விநியோகக் குறிப்பு கையேட்டுச் சீட்டை டிபிக்கு மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications