உங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்.
உங்களுடைய ஆண்டு வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றதோ அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.
இப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.
தவனைக் காலம் அதிகரிப்பு
இந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.
புதிய திட்டங்கள்
2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
வீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.
6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்
ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்
ஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்
18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.
மொத்த நன்மை
மேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.
மாதத் தவனைக் குறையும்
2.4 லட்சம் மானியம் மட்டும் இல்லாமல் மாதத் தவனையும் 2,200 ரூபாய் வரை குறையும்.
வருமான வரி விலக்கு
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் பெறும் போது 30 சதவீதம் வரை வருமான வரியாகச் செலுத்துபவர்களுக்கு வருடத்திற்கு 61,800 ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications