ஜூம் ஏர்: இந்தியாவின் புதிய விமான சேவை பிப்ரவரி 15 முதல்..!

ஜூம் ஏர் விமான சேவை இந்தியாவில் 15-ம் தேதி துவங்கப்பட்டால் இது 12 வது உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனமாக இருக்கும்.

இந்தியாவில் வேகமாக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஜூம் ஏர் என்ற பெயரில் புதிதாக ஒரு விமான சேவை துவங்க உள்ளது.

ஜூம் ஏர் விமான சேவை இந்தியாவில் 15-ம் தேதி துவங்கப்பட்டால் இது 12 வது உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனமாக இருக்கும்.

முதல் பயணம்

முதல் பயணம்

ஜெக்சஸ் ஏர் சேவைகள் டெல்லியில் இருந்து அமிர்தசரஸ், சூரத் மற்றும் பாவ்நகர் ஆகிய இடங்களுக்குத் தனது விமான சேவையை அளிக்க இருக்கின்றது. இதற்காக மூன்று CRJ 200LR விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது ஜூம் ஏர் நிறுவனம்.

பிப்ரவரி 15

பிப்ரவரி 15

ஜூம் ஏர் நிறுவனம் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விமான நிறுவனங்களில் 6 வது உள்நாட்டு விமான சேவை அளிக்கும் நிறுவனமாகும்.

பிப்ரவரி 15-ம் தேதி டெல்லியில் இருந்து கொல்கத்தா வழியாக துர்காப்பூர் வரை தனது முதல் விமான பயணத்தை அளிக்க இருக்கின்றது ஜூம் ஏர் நிறுவனம்.

 

நகரில் புதிய குழந்தை

நகரில் புதிய குழந்தை

18 முதல் 20 சதவீதம் வரை விஜயவாடா, திருப்பதி, ராஞ்சி மற்றும் சண்டிகர் வழித்தடங்களில் விமான போக்குவரத்து வளர்ச்சி அடைந்து வருவதைப் பார்ப்பதாகவும் எனவே இந்த வழித்தடங்களில் தொடர் விமான சேவைகளை அளிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் ஜூம் ஏர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கவுஸ்தவ் மோகன் தார் கூறுகிறார்.

வழித்தடங்கள்

வழித்தடங்கள்

திருப்பதி, விஜயவாடா, மும்பை, ஷில்லாங், அய்சால், Pasighat மற்றும் ஜீரோ (அருணாசல பிரதேசம்), அலகாபாத், கோரக்பூர், இந்தூர், போபால் வழித்தடங்களில் தங்களது விமான சேவையை அளிக்க முடிவு செய்துள்ள ஜூம் ஏர் நிறுவனம் ஏப்ரல் முதல் தின சரி விமான சேவையை அளிக்கும் என்று கூறுகின்றனர்.

அனுமதி வழங்கப்பட்டது

அனுமதி வழங்கப்பட்டது

சிவில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அவர்களிடம் இருந்து விமான சேவை அளிப்பதற்காக ஜூம் ஏர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு முன்பு முறையான அனுமதிகளைப் பெற்றுள்ளது.

நிறுவனம்

நிறுவனம்

ஜெக்ஸஸ் ஏர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் கீழ் ஜூம் ஏர் நிறுவனம் இயங்கும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+