எம்எல்ஏ-க்களை ‘கோல்டன் பே ரிசார்ட்டில்’தங்க வைக்க சசிகலா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

100-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் தன் வசம் வைத்துக்கொள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டிற்கு சசிகலா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று செவ்வாய்க்கிழமை உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து உள்ளது, இதனால் சசிகலாவின் முதலமைச்சர் கனவு 10 வருடங்களுக்குத் தள்ளிப்போடப்படுவது மட்டும் இல்லாமல் அபராதமும் செலுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சரி, 100-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் தன் வசம் வைத்துக்கொள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டிற்கு சசிகலா செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா..?

ரூம்கள்

ரூம்கள்

கோல்டன் பே ரிசார்ட்டில் 60-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் உள்ளன. டிரன்கிவில் அறைகள் எனப்படு சாந்தமான அறைகளின் ஒரு நாள் வாடகை 5,500 ரூபாய், கடற்கரையைப் பார்த்து ரசிக்கக் கூடிய அறைகளின் ஒரு நாள் வாடகை 6,600 ரூபாய், மற்றும் பேரடைஸ் சூட் அறைகளின் ஒரு நாள் வாடகை 9,900 ரூபாய் ஆகும்.

சலுகை

சலுகை

மொத்தமாக அனைத்து அறைகளையும் புக் செய்தால் ஒரு அறைக்கு 7,000 ரூபாய் என்றும் கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்கு 25 லட்சம் ரூபாய் என்றும் கூறுகின்றனர்.

உணவு மற்றும் மது

உணவு மற்றும் மது

மேலே கூறிய கட்டணத்தில் உணவு, தண்ணீர், நொறுக்கு தீனிகள், பழங்கள், பானங்கள், மது பானங்கள் போன்றவை அடங்காது.

பொழுதுபோக்கு
 

பொழுதுபோக்கு

எம்எல்ஏக்களுக்கு தங்க இவ்வளவு செலவு செய்தது மட்டும் இல்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வேறு தனியாக நடத்தப்பட்டுள்ளது.

உணவிற்குச் செலவு செய்த தொகை

உணவிற்குச் செலவு செய்த தொகை

200 நபர்கள் ரெசார்ட்டில் தங்கியிருந்திருந்தால் உணவு, பாணங்கள் போன்றவற்றுக்கு ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2000 என்றால் ஆறு நாட்களுக்கு இது ஒரு 25 லட்சம் ரூபாய்.

உடை

உடை

சட்டமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தை அடுத்து உடனடியாக ரெசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் எவ்வளவு நாட்கள் தங்குவார்கள் என்று ஏதும் முடிவு செய்யப்படவில்லை.

எனவே புதிதாக உடை போன்றவற்றை அளிக்கத் தலைக்கு 1000 ரூபாய் என்றாலும் ஆறு நாட்களுக்கு 12 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கும்.

 

ஆடம்பரமான ரெசார்ட்

ஆடம்பரமான ரெசார்ட்

அடிப்படை வசதிகள் மட்டும் இல்லாமல் 24 மணி நேர அறைகளுக்கான சேவை, தொலைப்பேசி, ஒவ்வொரு அறையிலும் இரண்டு பால்கணி என ரெசார்ட்ட்ல் வசதிகள் உள்ளன.

மேலும் ரெசார்ட்டில் ஊனமுற்றோருக்கு ஏற்ற வசதிகள், குளிர்பான பெட்டி எனப் பல வசதிகள் உள்ளன.

 

போக்குவரத்து கட்டணம்

போக்குவரத்து கட்டணம்

சட்டமன்ற உறுப்பினர்களைச் சொகுசு பேருந்துகள் வைத்து அளத்து சென்றதற்கு 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

கட்சி வங்கி கணக்குகள்

கட்சி வங்கி கணக்குகள்

அதிமுக கட்சி வங்கி கணக்கை பன்னீர்செல்வம் முடக்கியதால், பொருளாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க முடியாது என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதனால் அதிமுக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Price of power: How much is Sasikala’s resort bill?

Price of power: How much is Sasikala’s resort bill?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X