ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன மூன்று முன்மொழியப்பட்ட ஒப்பந்தங்களை 2017 அரையிறுதியில் முடிக்கும் என்றும் அதில் ஏர்செல் இணைப்பும் அடங்கும் என்று கூறப்படுகின்றது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன மூன்று முன்மொழியப்பட்ட ஒப்பந்தங்களை 2017 அரையிறுதியில் முடிக்கும் என்றும் அதில் ஏர்செல் இணைப்பும் அடங்கும் என்று கூறப்படுகின்றது.
அணில் அம்பானி தலைமையிலான தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃபாரா டெல் நிறுவனத்திற்கு 51 சதவீத பங்குகளை விற்க முடிவுசெய்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் டவர் பிரிவை கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனத்திற்கு 11,000 கோடி ரூபாய்க்கும் விற்கின்றது.
இணைப்புகள்
டவர் பிரிவு விற்பனை, ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனத்துடனான இணைப்பு ஆகியவை 2017-ம் ஆண்டு அரையாண்டிற்குள் முடிந்துவிடும் என்றும் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
இவை மட்டும் இல்லாமல் சிஸ்டமா ஷேம் டெலிசர்வீஸ் நிறுவனத்துடனான இணைப்பு மார்ச் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஒருங்கிணைப்பு
நிறுவனத்தை முன்னேடுத்துச் செல்ல ஒரே வழி ஒருங்கிணைப்பு மட்டும் தான் என்றும், இதற்கான முதல் படியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் எடுத்துள்ளதாகவும் ஆர்காம் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி குருதீப் சிங் கூறினார்.
கடன் சுமை குறையும்
ப்ரூக்ஃபீல்ட் மற்றும் ஏர்செல் பரிவர்த்தனைகளால் 2018-ம் ஆண்டிற்குள் ஆர்காம் நிறுவனத்தின் 70 சதவீத கடன் பிரச்சனை குறையும் என்றும் டிசம்பர் 31-ம் தேதி வரை ஆர்காமின் கடன் தொகை 42,800 கோடியாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏர்செல் பெரிதாகப் பாதிப்பு இல்லை
ஏர்செல் நிறுவனத்தின் மீது வழக்கால் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை என்றும்,வழக்கை முழுமையாகக் கண்காணித்து வருவதாகவும், ஆர்காம் நிறுவனத்தின் உத்தி மற்றும் ஒழுங்குமுறை விவகார தலைவர் புனித் கர்க் கூறினார்.
ஏர்செல் வழக்கு
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையை ரத்துச் செய்ய முடியாது என்றும், அதிகமான பங்குள் வைத்துள்ள பங்குதாரர்கள் யாரும் அந்த வழக்கில் இல்லை என்றும் மத்திய புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ப்ரூக்ஃபீல்ட்
2016-டிசம்பர் மாதம் கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனத்திற்குத் தனது நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் ஆர்காம் விற்றது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications