காதலர் தின சலுகையாக எகானமி வகுப்பு விமானப் பயணக் கட்டணத்தை 899 வரை குறைத்து அறிவித்துள்ளது விஸ்தரா விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம்.
காதலர் தின சலுகையாக எகானமி வகுப்பு விமானப் பயணக் கட்டணத்தை 899 வரை குறைத்து அறிவித்துள்ளது விஸ்தரா விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம்.
இந்தச் சலுகை விலையில் குறைந்த அளவே டிக்கெட்கள் வழங்கப்படும் என்றும், முதலி வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படு என்று விஸ்தரா நிறுவனம் கூறியுள்ளது.
சொகுசு விமானக் கட்டண சலுகை
எகானமி வகுப்பு விமானப் பயணக் கட்டணம் மட்டும் இல்லாமல் சொகுசு மற்றும் பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் கட்டணங்களையும் 60 சதவீதம், 40 சதவீதம் எனக் குறைத்துள்ளது விஸ்தரா.
சலுகை காலம்
காதலர் தின சிறப்புச் சலுகை விலையில் 2017 பிப்ரவரி 17-ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்றும், 2017 பிப்ரவரி 28 முதல் 2017 செப்டம்பர் 20-ம் தேதி வரை பயணம் செய்யலாம் என்றும் விஸ்தரா நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழித்தடங்கள்
சலுகை விலையில் விமான டிக்கெட்களை 20 இடங்களுக்கு நாடு முழுவது புக் செய்யலாம். மேலும் அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட போர்ட் பிளேர் (அந்தமான்), அமிர்தசரஸ் மற்றும் லெஹ் (லடாக்), புதிதாக அறிமுகப்படுத்தப்ட்ட கொல்கத்தா-புனே பாதையிலும் சலுகை விலையில் பெறலாம் என்று விஸ்தரா நிறுவனம் கூறியுள்ளது.
எகானமி வகுப்பு விமானப் பயணக் கட்டண சலுகைகள்
கவுகாத்தி-பாக்தோகிறா 899 ரூபாய், கோவா-மும்பை 1,499 ரூபாய், தில்லி-அமிர்தசரஸ் 1,549 ரூபாய், தில்லி-புனே 2,399 ரூபாய் மற்றும் தில்லி-கோவா 3,299 ரூபாய் என விமானக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கிளப் விஸ்தரா உறுப்பினர்கள் 10 சதவீதம் வரை கூடுதல் சலுகை பெறலாம். இதற்கு CV10 என்ற பிரோமோ குறியீட்டை உள்ளிட வேண்டும்.
காதலர் சீசன்
காதலை தினத்தன்று தங்களது காதலை பிசினஸ் கிளாஸ் அல்லது பிரீமியம் எகானமி வகுப்பு விமானப் பயணத்துடன் மேலும் அழகாக்கலாம் என்று விஸ்தரா நிறுவனத்தின் தலைமை உத்தி மற்றும் வணிக அதிகாரி சஞ்சீவ் கபூர் கூறினார்.
விஸ்தரா
விஸ்தரா, டாடா மற்றுன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும். விமானச் சேவை துவங்கிய இரண்டு வருடத்தில் 20 இடங்களுக்குத் தனது விமானச் சேவையை 500 வாராந்திர விமானங்களுடன் 13 சொந்த விமானங்களுடனும் விஸ்தரா சேவையை அளித்து வருகின்றது.
டாடா
விஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் டாடா நிறுவனம் 51 சதவீத பங்குகளுடனும், சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் 49 சதவீத பங்குகளுடன் உள்ளன.
விமானச் சேவை
2016-ம் ஆண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் சீனாவை மிஞ்சி 23.3 சதவீதம் வரை ஏர் டிராப்பிக்ல் வேகமான வளர்ச்சியை இந்திய பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications