ஒரு மோசமான முதலாளியை சமாளிக்க ‘ஓ பன்னீர் செல்வம்’ இடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை..!

தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பதவி விலகுவதற்கும் மற்றும் அதிமுகப் பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்வர் பதவிக்கு முன்மொழியவும் தான் வற்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார

By Jayakumar
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் அவர் பதவி விலகுவதற்கும் மற்றும் அதிமுகப் பொதுச்செயலாளர் சசிகலாவை முதல்வர் பதவிக்கு முன்மொழியவும் தான் வற்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

நம்மில் பலருக்கும் பணி செய்யும் இடத்தில் இதே போன்ற சூழ்நிலை ஏற்படலாம். மேலதிகாரிகளின் நிர்பந்தம் காரணமாக நமக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்ய நேரிடலாம். ஒரு மோசமான மேலாளர் தனது வேலையாட்களின் ஒழுக்க உணர்வைப் பாதிப்பதோடு அவர்களின் உற்சாகத்தையும் குலைக்கலாம். மேலும் அவர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம்.

புத்திசாலித்தனமாகச் சமாளித்தல்

புத்திசாலித்தனமாகச் சமாளித்தல்

சில நேரங்களில் மேலாளரிடம் தந்திரமாக நடந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உயர்பதவியில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழே பணிபுரிபவரிடம் பாதுகாப்பின்றி உணரலாம். இது போன்ற நேரங்களில் நீங்கள் செய்த பணியில் மேலாளரின் பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் அவரைப் பாதுகாப்பாக உணரச் செய்யலாம்.

பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், சென்னை குடிநீர் பிரச்சினை, மற்றும் வரதா புயல் சமயத்தில் பன்னீர்செல்வம் தான் அடைந்த வெற்றி சிகலா மற்றும் அவரது ஆதரவாளர்களை எரிச்சலடைய செய்தது என்கிறார்.

 

நிலைமை கை மீறிச் செல்லும்போது

நிலைமை கை மீறிச் செல்லும்போது

சில நேரங்களில் நாம் எவ்வளவு முயன்றாலும் மேலாளர் நம் மேல் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மாற்ற முடியாது இந்த நேரத்தில் பிறரின் உதவியை நாடலாம்.

திமுகச் செயல்தலைவர் ஸ்டாலின், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பன்னீர்செல்வத்தை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

 

பயனுள்ள பேச்சுவார்த்தை

பயனுள்ள பேச்சுவார்த்தை

மேலாளரிடம் தீர்வை நோக்கிய வகையில் உரையாடல்களை நிகழ்த்தலாம். சரியான தகவல்கள், உண்மைகள் போன்றவை விவாதிக்கப்பட வேண்டும். இது மேலாளரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்

உணர்வுசார் நுண்ணறிவைப் பயன்படுத்துதல்

உணர்வுசார் நுண்ணறிவைப் பயன்படுத்துதல்

மோசமான மேலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்பவர்கள். இதை உணர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சினையை அவர்களின் பார்வையில் ஆராயலாம். அவர்களின் உளவியலைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி உணர்வுசார் நுண்ணறிவைப் பயன்படுத்தலாம்.

உங்களின் எதிர்பார்ப்புகளைக் கையாளுதல்

உங்களின் எதிர்பார்ப்புகளைக் கையாளுதல்

உங்கள் மேலாளர் நியாயமற்றவர் என்று உணர்ந்தபின், உங்களின் எதிர்பார்ப்புகளைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். உங்களால் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்தப் பிரச்சினையைச் சரி செய்ய முடியும். எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இது உங்களின் வேலையில் கவனம் செலுத்த உதவுவதுடன் பணித்திறன் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

பங்குதாரர்களைக் கையாளுதல்

பங்குதாரர்களைக் கையாளுதல்

உங்கள் மேலாளர்களின் உயரதிகாரிகளிடம் சரியான முறையில் உறவுமுறையை அமைத்துக்கொள்ள வேண்டும். பங்குதாரர்களைக் கையாளுதல் நிறுவன சூழலில் முன்னேற உதவும். மேலும் மோசமான மேலாளரால் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

மோடியின் ஆதரவு

மோடியின் ஆதரவு

பன்னீர் செல்வம் தனக்குப் பிரதமர் மோடியின் ஆதரவு இருப்பதாகக் கூறி சசிகலாவை கடந்த 12 மணி நேரமாக எதிர்த்து வருகிறார். கடந்த புதன்கிழமை "அம்மாவின் மரணத்தில் மக்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அதைப் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். இந்தக் கமிட்டி தனது அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யும். அறிக்கை பொதுமக்களுக்கும் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும்" என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What O Panneerselvam can teach you about surviving a bad boss

What O Panneerselvam can teach you about surviving a bad boss
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X