விரைவில் சில நிமிடங்களில் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண் பெறலாம் என்றும், எளிதாக வருமான வரியை ஸ்மார்ட்போன் முழம் பயன்படுத்தலாம் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளத்திற்குக் கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக
விரைவில் சில நிமிடங்களில் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண் பெறலாம் என்றும், எளிதாக வருமான வரியை ஸ்மார்ட்போன் முழம் பயன்படுத்தலாம் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளத்திற்குக் கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நேரடி வரி வாரியம் வருமான வரி செலுத்துவதை மேலும் எளிமையாக்கும் முயற்சியாக ஆதார் கார்டு விவரங்கள் பயன்படுத்திப் பயோமெட்ரிக் அடையாளங்கள், கை விரல் ரேகை போன்றவற்றைப் பயன்படுத்தி எளிதாக நேரடியாகப் பான் கார்டு அளிக்கும் முயற்சி
சிம் போன்று பான் கார்டும்
ஆதார் விவரங்களைப் பயன்படுத்திச் சிம் கார்டுகள் வழங்கப்படும் போது ஏன் பான் கார்டு வழங்கக் கூட்தாது என்று இதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகின்றது. இப்படிச் செயதன் மூலம் முதலில் பான் எண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும், பிறகு இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பான் கார்டு உங்கள் கைகளுக்குத் தபால் மூலம் வந்து சேரும்.
நிறுவனங்களின் பான் கார்டுகள்
மத்திய நேரடி வரி வாரியம் ஏற்கனவே புதிய நிறுவனங்களுக்கு 4 மணி நேரத்தில் பான் கார்டுகள் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் உடனடியாக நிறுவனங்களும் பான் கார்டுகளைப் பெறும் என்று கூறப்படுகின்றது.
பான் கார்டும் விண்ணப்பிக்கலாம்
தனியாக, வருமான வரித் துறை வரி செலுத்துவதற்காக இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்திச் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் புதிய பான் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், டிராக் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
இளைய வரி செலுத்துனர்கள்
ஏற்கனவே இணையதளம் மூலம் பல சேவைகளை அளித்து வரும் வருமான வரித்துறை இப்போது இந்தச் செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம் முதியவர்கள் மட்டும் இல்லாமல் இளைய வரி செலுத்துனர்களும் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.
இன்-ஹவுஸ் தயாரிப்பு
இந்த இரண்டு திட்டங்களுக்கான பணிகளையும் இன்-ஹவுஸ் தயாரிப்பாகவே நேரடி வரிக்கான மத்திய வாரியத்தால் ஒருங்கிணைத்த கணினி இயக்குநரகம் உதவியுடன் செய்து வருவதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications