எஸ்பிஐ உடன் 5 துணை வங்கிகள் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி சேவையான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ஐந்து துணை வங்கிகளுடன் இணைவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி சேவையான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ஐந்து துணை வங்கிகளுடன் இணைவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உலகின் டாப் 50 வங்கிகள் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பை எஸ்பிஐ பெற்றுள்ளது.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது எஸ்பிஐ மற்றும் அதன் 5 துணை வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை உறுதி செய்தார்.

துணை வங்கிகள்

துணை வங்கிகள்

இதனால் எஸ்பிஐ வங்கியுடன் ஸ்டேட் பாங்க் ஆ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் , ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆ பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவை இணைகின்றன.

இவை மட்டும் இல்லாமல் பாரத் மஹிலா வங்கியும் எஸ்பிஐ வங்கியுடன் இணைவது உறுதியாகின்றது.

 

டாப் 50 உலக வங்கிகள்

டாப் 50 உலக வங்கிகள்

டாப் 50 உலக வங்கிகளில் இது வரை எந்த இந்திய வங்கி சேவையும் பட்டியலிடப்பட்டது இல்லை. இப்போது நடைபெற இருக்கும் இந்த இணைவை அடுத்து எஸ்பிஐ அந்தப் பட்டியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தேதியை அரசு அறிவிக்கவே காத்திருப்பு

தேதியை அரசு அறிவிக்கவே காத்திருப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குனர் தினேஷ் காரா இதுபற்றிக் கூறுகையில் தரவு ஒருங்கிணைப்புப் பணிகள் ஒரு மாதத்தில் முடிவடைந்துவிடும் என்றும் முழு இணைவுக்கான தேதியை அரசு அறிவிக்கவே காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இணைப்பிற்குப் பிறகான நிலையான சேவையை வழங்குவதே மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐந்து துணை வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணையும் போது ஐசிஐசிஐ வங்கியை விட ஐந்து மடங்கு மிகப் பெரிய வங்கியாக எஸ்பிஐ இருக்கும்.

அரசுக்குச் செலவு குறையும்

அரசுக்குச் செலவு குறையும்

இந்த இணைப்பின் மூலம் 1,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்வதில் செலவைக் குறைக்கும் என்றும் மத்திய அமைச்சரவை குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

மத்திய அரசு ஆனைக்காகக் கற்றிருப்பதாகவும், அரசு அறிவித்த உடன் நாங்கள் எங்களது பணிகளை இணைந்து செய்ய இருப்பதாகவும், மார்ச் மாதத்தில் இருந்து இணைந்து வங்கி சேவை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறினார்.

பங்குகள்

பங்குகள்

2016 ஆகஸ்ட் மாதம் இணைப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாங்க் ஆ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் பங்குகளில் 10 ஒருவருக்கு இருந்தால் கூடுதலாக 28 பங்குகள் கிடைக்கும் என்றும், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் திருவாங்கூர் வங்கிகளில் 10 பங்குகள் வைத்திருந்தால் கூடுதலாக 22 பங்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

வரவு செலவு

வரவு செலவு

வரவு செலவு நன்மை அடிப்படையில் பார்த்தால் நிதி செலவுகளில் 0.30 சதவீதம் வரை குறையும் என்றும், வருமான விகிதத்தில் 1 சதவீதம் வரை குறையும் என்றும் தற்போது 49 சதவீதமாக வருமான விகிதம் இருப்பதாகவும் காரா கூறுகின்றார்.

வங்கிகள் இணைப்பிற்குப் பிறகு துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் நன்மைகள் பெற இயலும்.

 

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ஏற்கனவே அருந்ததி பட்டாச்சாரியா இணைப்பிற்குப் பிறகு யாருக்கும் வேலை பறிபோகாது என்றும் புதிதாக எஸ்பிஐ வங்கியில் இருந்து வேலை உறுதி கடிதம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இணைப்பிற்குப் பிறகு ஊழியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தில் இருந்து 2.70 லட்சமாக இருக்கும்.

 

கிளைகள்

கிளைகள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் இப்போது 18,000 கிளைகள் உள்ளன. இதுவே இணைப்பிற்குப் பிறகு 23,000 கிளைகளாக அதிகரிக்கும். அது அட்டும் இல்லாமல் 36 வெளிநாடுகளில் 200 அலுவலகங்களும் 62,900 ஏடிஎம் சேவை மையங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+