பேஸ்புக் நிறுவனம் புதன்கிழமை முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிய வேலைவாய்ப்பு சேவையை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லின்கிடுஇன் சேவைக்குப் போட்டியாகத் துவங்கி உள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: பேஸ்புக் நிறுவனம் புதன்கிழமை முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் புதிய வேலைவாய்ப்பு சேவையை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லின்கிடுஇன் சேவைக்குப் போட்டியாகத் துவங்கி உள்ளது.
சமுக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக் நிறுவனம் இந்தப் புதிய சேவையை அளிக்கத் துவங்கியதினால் இனி பேஸ்புக் மூலம் வணிகம் தொடர்பான சந்தேகங்கள், புதிதாக வேலை தேடுவது போன்ற பணிகளையும் செய்யலாம் என்று கூறப்படுகின்றது.
பேஸ்புக் சமுக வலைத்தளங்களில் வேலைக்கான அறிவிப்பு
வணிகம் செய்பவர்களில் பலர் இப்போது பேஸ்புக் சமுக வலைத்தளங்களில் வேலைக்கான அறிவிப்பை வெளியிடுவதாகவும், இதற்காகவே பேஸ்புக் இப்போது புதிய வசதிகளைச் செய்துள்ளதாகவும் கலிபோர்னியாவை சார்ந்த இணையப் பயனர் கூறியுள்ளார்.
செய்திகள் ஃபீடு
வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்குப் பணம் அளித்தால் செய்திகள் ஃபீடுகளிலும் விளம்பரம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.
இப்போதே விண்ணப்பிக்கவும்
‘இப்போதே விண்ணப்பிக்கவும்' போன்ற பொத்தான்கள் இப்போதே பேஸ்புக் இணையதளத்தில் உள்ளது, அதனைப் பயன்படுத்தி எளிதாகப் பேஸ்புக் தளத்தில் எளிதாகத் தங்களது விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம்.
வேலைக் விண்ணப்பிக்க
வேலைக்காகப் பேஸ்புக் தளத்தில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் தங்களது விவரங்களை எளிதாகச் சேர்க்கலாம், திருத்தலாம், ஆய்வு செய்யலாம் என்று பேஸ்புக் தெரிவிக்கின்றது.
வணிக பேஸ்புக்
பேஸ்புக் இணையதளத்தில் ஏற்கனவே வணிகத்திற்காக பேஸ்புக் பயன்படுத்தும் நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களுடன் நேரடியாகச் செய்திகள் அனுப்பி உரையாடும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சோதனை முடிந்தது
பேஸ்புக் நிறுவனம் இது குறித்துக் கூறுகையில் இதற்கான சோதனை அமெரிக்காவில் இப்போது செய்துள்ளதாகவும், விரவில் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவிலும் இந்தச் சேவை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
மைக்ரோசப்ட் காலாண்டு அறிக்கை
மைக்ரோசப்ட் நிறுவனம் அன்மையில் காலாண்டு அறிக்கையை வெளியிட்ட போது கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட சமுக வலைத்தளமான லின்கிடுஇன் போன்றவற்றால் நல்ல லாபம் பெற்றதாகக் குறிப்பிட்டு இருந்தது.
மைரோசாப்ட்
அமெரிக்காவில் இருந்து மிகப் பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் முதலில் மென்பொருள் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. அன்மையில் லின்கிடுஇன் வேலைவாய்ப்பு சமுக வலைத்தளத்தை வாங்கிய பிறகு மூன்று மாதத்தில் நல்ல லாபம் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றது.
பேஸ்புக்கில் முதலீடு
மைக்ரோசப்ட் நிறுவனம் சமுக வலைத்தளமான பேஸ்புக் தளத்தில் குறிப்பிட்ட அளவிற்கு முதலீடு செய்துள்ளதது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications