மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி.. எதற்காக..?
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து கிளவுட் இணைப்பின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் கார்களை உருவாக்கவும், தயாரிக்கவும் கூட்டணி அமைத்துள்ளது.

இக்கூட்டணியில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மார்ச் 7ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டணி 'TAMO' என்ற பெயரில் புதிதாக வர்த்தகம் செய்யவும், தயாரிப்பில் ஈடுப்படவும் முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரான ஃபூடூரோ என்னும் காரை அறிமுகம் செய்யவும் டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications