ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், டாடா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் ஆர்காம்-ஏர்செல்-எம்டிஎஸ் நிறுவனங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், டாடா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் ஆர்காம்-ஏர்செல்-எம்டிஎஸ் நிறுவனங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக இது குறித்து நன்கு தெரிந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இப்படி ஒரு இணைவு நடந்தால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெயரை ரிலையன்ஸ் நிறுவனம் பெறும். இப்போது ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் இணைந்தால் முதல் இடத்தைப் பெறும், ஏர்டெல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படும்.
இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கும் ஆர்காம் நிறுவனத்திற்கும் இடையில் போட்டில் நிலவும் நிலை உறுவாகி உள்ளது.
டாடா குழுமத்தின் புதிய தலைவரான என் சந்திரசேகரன் அவர்களுடனான சந்திப்பை அடுத்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி இந்த இணைப்பு கண்டிப்பாகச் சாத்தியம் என்று நம்புவதாகக் கூறுகின்றனர். இது குறித்து இப்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்திற்கு 30,000 கோடி வரை கடன் இருப்பதாகவும், அது மட்டும் இல்லாமல் ஜப்பானின் டொக்கோமோ நிறுவனத்துடனான சட்ட பிரச்சனைகள் போன்றவை தடைகளாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. டாடா டெலி சர்வீசஸ், டாடா சன்ஸ் மற்றும் ஆர்காம் நிறுவனங்கள் இது குறித்துக் கேள்வி கேட்ட மின்னஞ்சலுக்குப் பதில் ஏதும் அளிக்கவில்லை. ஆர்காம், ஏர்செல், டாடா டெலி சர்வீஸஸ் நிறுவங்களுக்குக் கடன் அளித்துள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்திடம் இது குறித்துக் கேட்கப்பட்டதற்கு இதற்கான வாய்ப்பு நெருங்கி வருவதாகக் கூறுகின்றது. ஆர்காம் நிறுவனத்துடன் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை இணைப்பதில் டாடாவின் கடன் தொகை மட்டும் தான் சிக்கலாக உள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். டாடா குழுமம் டெலிகாம் பிரிவைச் சுத்தமாக விற்றுவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளது. இதற்காக டாடா நிறுவனம் 10,000 கோடி செலவு செய்து மொத்தமாக டெலிகாம் பிறிவை விற்க முடிவு செய்ய உள்ளதாகவும் கூறுகின்றனர். இவை மட்டும் இல்லாமல் ஈக்விட்டி மூலம் 40,000 கோடி வரை திரட்ட டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், நிறுவனத்தை விற்பது, அல்லது தாற்காலிகமாக மூடுவது என்று முடிவு செய்துள்ளதாக டாடா குழும நிர்வாகி கூறியுள்ளார். வேறு நிறுவனத்திற்கு விற்பதினால் ஈக்விட்டி மூலம் முதலீடுகள் பெற டாடா குழுமத்திற்கு விருப்பம் இல்லை என்றும் குறிப்பிட்டார். தொலைத்தொடர்பு துறை சந்தையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டும் ஜியோவிற்குப் போட்டியாக விலை போரை நடத்தி வருகின்றது. இன்றைய தொலைத்தொடர்பு துறை உள்ள சூழலில் முதல் மூன்று இடங்களில் உள்ள நிறுவனங்களால் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் விரைவில் இணைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசி நிலையில் உள்ள நார்வேயின் டெலினார் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது, டெலினார் நிறுவனத்தை ஆர்காம் அல்லது ஏர்டெல் நிறுவனம் வாங்க வாய்ப்புள்ளது. தற்போது உள்ள 12 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் 53 மில்லியன் பயனர்களுடன் 8வது இடத்தில் உள்ளது. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் ஜியோ சேவை அளிக்கும் முன்பிருந்தே போராட்ட நிலையில் தான் உள்ளது. ஏற்கனவே வோடாபோன் நிறுவனத்துடனான இணைப்பு கடன் பிரச்சனையால் தோல்வியுற்றது. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் ஆர்காம், ஏர்செல், எம்டிஎஸ் நிறுவனத்துடன் இணைந்தால் 260 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெறும். ஏர்டெல் நிறுவனம் 2016 டிசம்பர் 31-ம் தேதி வரையிலான கணக்கின் படி 266 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உள்ளது. வோடாபோன் நிறுவனத்திடம் 205 மில்லியன் வாடிக்கையாளர்களும், ஐடியா நிறுவனத்திடம் 190 மில்லியன் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இரு நிறுவனங்களும் இணையும் போது 395 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தைப் பிடிப்பார்கள். டாடா டெலி சர்வீசஸ், ஏர்செல், எம்டிஎஸ், ஆர்காம் நிறுவனங்களிடம் 18 சதவீதம் வருவாய் சந்தை பங்கு உள்ளது, ஏர்டெல் நிறுவனத்திடம் 31 சதவீதம், வோடபோன் நிறுவனத்திடம் 23 சதவீதமும், ஐடியா நிறுவனத்திடம் 19 சதவீதமும்க் வருவாய் சந்தை பங்கு விகிதம் உள்ளது. ஜியோ நிறுவனத்திடம் டிசம்பர் இறுதி வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், ஆனால் இலவச சேவை அளித்து வருவதால் வருவாய் சந்தை மதிப்பு ஏதும் இல்லை. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்திடம் 800 மெகா ஹெட்ஸ் பேண்டுவித் 19 சர்க்கிள்களில் உள்ளது, இதை வைத்து 4ஜி சேவை அளிக்க முடியும் ஆனால் சந்தை விலையை அரசுக்குச் செலுத்தினால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். டாடா டெலி சர்வீசஸ் ஆர்காம் நிறுவனத்துடன் இணையும் போது ஏற்கனவே ஜியோவிடம் இருந்து சேவையைப் பகிர்ந்து கொள்வதால் அதிகமான தொகையை அரசுக்கு ஆர்காம் செலுத்த விரும்பாது என்றும், 800 மெகா ஹெட்ஸ் காற்றலைகளில், சில அல்லது மொத்தமாக அரசுக்குத் திருப்பி அளிக்கப்படும் என்று இது குறித்த விவரங்களைத் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
புதிய தலைவருடன் சந்திப்பு
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் உள்ள சிக்கல்கள்
நிறுவனங்கள் தரப்பில் இருந்து பதில் இல்லை
முக்கியச் சிக்கல் கடன்
டாடா குழும நிர்வாகிகளின் முடிவு
ஜியோ - ஏர்டெல் போட்டி
தொலைத்தொடர்பு துறை
டெலினார்
டாடா டெலி சர்வீசஸ்
ஆர்காமுடன் இணைந்தால் என்னவாகும்..?
வோடாபோன் - ஐடியா
சந்தை வருவாய்
ஜியோ சந்தை வருவாய்
டாடா நிறுவனத்திடம் உள்ள காற்றாலைகளின் நிலை
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications