இந்தியாவில் டாப் 10 பெரிய நிறுவனங்கள்..!

உலக நாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா, நடுத்தர வர்க்கத்தினர்களின் முன்னேற்றத்திற்கான தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நாடு எனலாம்.

உலக நாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா, நடுத்தர வர்க்கத்தினர்களின் முன்னேற்றத்திற்கான தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நாடு எனலாம். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் சிலவற்றிற்கு இந்தியாதான் தாய்வீடாக உள்ளது.

உலகின் முன்னணி தொழில் வளர்ச்சி நாடாகச் சீனா இருந்து வந்த போதிலும், ஆய்வாளர்கள் இந்தியா தான் அடுத்த சில ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி நிறைந்த நாடாக இருக்கும் என்றும், உலக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா ஒரு உந்துதலாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்தியாவிற்குத் தொழில் வளர்ச்சியில் நல்ல எதிர்காலம் இருக்கும் நிலையில் தற்போது வருமான அளவில் மிகப்பெரிய அளவில் இருக்கும் 10 முன்னணி தொழில் நிறுவனங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

10. டாடா கல்சல்டன்ஸி சர்வீஸஸ்

10. டாடா கல்சல்டன்ஸி சர்வீஸஸ்

துறை: தகவல் தொழில்நுட்பம்
வருமானம்: $16.54 பில்லியன்
தொழிலாளர்களின் எண்ணிக்கை: 371,519

டிசிஎஸ் என்று சொல்லப்படும் டாடா கல்சல்டிங் சர்வீஸ் என்னும் இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. டாடா குரூப் நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம் உலக அளவில் பிசினஸில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கின்றது. 1968ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்திற்கு பஞ்ச் கார்ட் செய்யும் சேவையில் இருந்து தொடங்கியது. தகவல் தொழில்நுட்பம் குறித்த சேவை செய்யும் நிறுவனங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் 10வது பெரிய நிறுவனமாகவும் வருமான அளவில் உள்ளது.

மும்பையைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் 58 துணை நிறுவனங்களுடன் 46 நாடுகளில் 280 அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 3வது அதிகபட்ச தொழிலாளர்களை கொண்ட நிறுவனமாக இந்த நிறுவனம் பெருமை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதக் கணக்கின்படி இந்த நிறுவனத்தில் 371,519 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 9.ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

9.ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

துறை: உலோகங்கள் மற்றும் சுரங்கம்
வருமானம்: $17 பில்லியன்
தொழிலாளர்கள் எண்ணிக்கை: 20,238

உலக அளவில் அலுமினிய வணிகத்தில் அதிக வருமானம் பெரும் நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வரும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருட வரவு செலவு $17 பில்லியன் ஆகும். மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் ஆசிய அளவில் அதிகளவு அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்று, ஆசியாவில் உள்ள நாடுகளில் 13 அலுமினிய உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிண்டால்கோ நிறுவபன் கடந்த 2-3 ஆண்டுகளில் அலுமினிய தொழில் மீதான ஆர்வத்தை குறைத்துள்ளது. உலக அளவில் அலுமினியம் உள்படப் பல கமாடிட்டி பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகளால் விலை மதிப்பு சரிவு காரணமாக இந்த நிலையை ஹிண்டால்கோ எடுத்துள்ளது. மேலும் தொழிலின் மூலதன செலவின் அதிகரிப்பு காரணமாக உற்பத்தியைக் குறைப்பதோடு கடன்களைக் குறைப்பதிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

 

8.டாடா ஸ்டீல்

8.டாடா ஸ்டீல்

துறை: இரும்பு மற்றும் ஸ்டீல்
வருமானம்: $20 பில்லியன்
தொழிலாளர்கள் எண்ணிக்கை: 80,500

உலக அளவில் முன்னணி தொழில் நிறுவனமான டாடா குரூப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றுதான் டாடா ஸ்டீல் லிமிடெட் ஆகும். இதை TISCO என்றும் குறிப்பிடுவர். கடந்த 2015ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி $20 பில்லியன் வருமானம் பெறும் அளவிற்கு முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த 1907ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் இந்தியாவில் பிரபல தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது 26 நாடுகளில் வளர்ந்து ஒரு மிகப்பெரிய ஆலமரமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது 80500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். உலக அளவில் ஸ்டீல் உற்பத்தில் 10 வது நிறுவனமாக இந்த நிறுவனம் விளங்கி வருகிறது. அதாவது வருடம் ஒன்றுக்கு 25.3 மில்லியன் டன் அளவுக்கு ஸ்டீல் உற்பத்தியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

7.எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்

7.எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்

தொழில்: எண்ணெய் மற்றும் வாயு
வருமானம்: $21 பில்லியன்
தொழிலாளர்கள் எண்ணிக்கை: 33,560

இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு தயாரிக்கும் நிறுவனமாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 70% இந்த நிறுவனத்திடம் இருந்து தான் வெளியே வருகிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறையால் கடந்த 1956ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. ONGC என்று கூறப்படும் இந்த நிறுவனம் உலக அளவில் எரிசக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் 17வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவின் வருமானம் அதிகமாக வழங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாகவும் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் சிறந்த ஊழியர் தேர்வு செய்யப்பட்டு அவருக்குச் சிறந்த தொழிலாளர் என்ற 'ஆன் ஹெவிட் சிறந்த தொழிலாளர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் பகுதியில் உள்ள இந்த நிறுவனம் இந்தியாவின் மதிப்பு மிகுந்த நிறுவனங்களில் 7 வது இடத்தில் இந்நிறுவனம் உள்ளது.

 

 6.இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்

6.இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்

துறை: எண்ணெய் மற்றும் வாயு
வருமானம்: $32 பில்லியன்
தொழிலாளர்கள் எண்ணிக்கை: 11,0000க்கும் மேல்

இந்தியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. HPCL என்று கூறப்படும் இந்த நிறுவனம் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தில் பல நிறுவனங்கள் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எஸ்ஸோ ஸ்டாண்டர்ட், லூப் லிமிடெட், கால்டெக்ஸ் ஆயில் ரீபைனிங் லிமிடெட் மற்றும் கோசான் கேஸ் ஆகிய நிறுவனங்கள் கடந்த 1970ஆம் ஆண்டுகளில் இணைந்து கொண்டன.

மும்பை மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மும்பை நிறுவனத்தில் வருடத்திற்கு 6.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பும், விசாகப்பட்டிணத்தில் வருடம் ஒன்றுக்கு 8.3 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திரிகரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் 11000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 

5. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

5. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

துறை: எண்ணெய் மற்றும் வாயு
வருமானம்: 36 பில்லியன்
தொழிலாளர்கள் எண்ணிக்கை: 13,535

கடந்த 1976ஆம் ஆண்டு பர்கா-ஷெல் ஆயில் ஸ்டோரேஜ் மற்றும் விநியோக நிறுவனம் என்ற இந்த நிறுவனம் இந்திய அரசால் கடந்த 1976ஆம் ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் இந்தியாவில் மிகச்சிறப்பாகச் செயல்படும் 'நவரத்னா' என்ற பெருமையை பெற்று இயங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனமாக இதன் வருட வருமானம் $36 பில்லியன் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் நான்கு இடங்களில் தனது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளது. மும்பை சுத்திகரிப்பு நிலையத்தில் வருடத்திற்கு 13 மெட்ரிக் டன் சுத்திகரிப்பு பணியிலும், கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் வருடத்திற்கு 9.5 மில்லியன் மெட்ரிக் டன்கள் சுத்திகரிப்பு பண்யிலும், பைனா சுத்திகரிப்பு நிலையத்தில் ஆண்டுக்கு 6 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்பு பணியிலும், மற்றும் நுமாலிர்கா சுத்திகரிப்பு நிலையத்தில் ஆண்டு ஒன்றுக்கு 3 மில்லியன் மெட்ரிக் டன்கள் சுத்திகரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் எண்ணெய் மற்றும் வாயுவின் தேவைப்பாடு அதிகமாகிக் கொண்டே வருவதால் அடுத்த ஆண்டுகளில் 62% உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகக் கூடுதலாக $6.75 பில்லியன் முதலீடு செய்ய உள்ளதாகவும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

4. பாரத ஸ்டேட் வங்கி

4. பாரத ஸ்டேட் வங்கி

துறை: வங்கி மற்றும் நிதி
வருமானம்: $42 பில்லியன்
தொழிலாளர்கள் எண்ணிக்கை: 293,469

எஸ்பிஐ என்று கூறப்படும் பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மற்றும் நிதி சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்திற்கு $300 பில்லியன் சொத்து மதிப்பு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையைத் தலைமை அலுவலகமாகக் கொண்ட இந்த வங்கிக்கு இந்திஆவில் 14000 கிளைகளும், வெளிநாடுகளில் 36 நாடுகளிலும் கிளைகள் உள்ளன. இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷார் காலத்தில் இருந்தே இயங்கி வரும் பழமையான வங்கி என்ற பெருமை இந்த வங்கிக்கு உள்ளது.

தற்போது செபி, இந்திய வணிக வங்கிகள் மத்தியில் வைப்பு நிதி மற்றும் கடன்களுக்கு 20% பங்கு கட்டுப்படுத்துகிறது. சமீபத்திய செபியின் அறிக்கையின்படி, பணத்தின் மதிப்பைக் குறைத்தல் கொள்கையின் விளைவாக, இந்தியப் பொருளாதாரம் சுமார் 75 சதவீதம் சரிந்ததாகவும் ஆனாலும் இது வரும் ஜனவரி இறுதிக்குள் மீட்டெடுக்க வழி இருப்பதாகவும் கூறியுள்ளது.

 

3. டாடா மோட்டார்ஸ் லிமிடெட்

3. டாடா மோட்டார்ஸ் லிமிடெட்

துறை: ஆட்டோமோட்டிவ்
வருமானம்: $42 பில்லியன்
தொழிலாளர்களின் எண்ணிக்கை: 60,000

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா குரூப் நிறுவனங்கைல் ஒன்று. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய இதன் வருமானம் $42 பில்லியன் ஆகும். கடந்த 1940ஆம் ஆண்டு மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமான இது, தற்போது உலக அளவில் மதிக்கத்தக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆட்டோம்பைல் உற்பத்தி மற்றும் அசெம்பிள் செய்து வரும் இந்நிறுவனம் இந்தியாவின் பல இடங்களிலும், அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் டாவூ கமர்ஷியல் வெஹிக்கல்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியும், கடந்த 2008ஆம் ஆண்டு பிரிட்டனில் ஜாக்யூவார் லேண்ட் ரோவர் என்ற நிறுவனத்தைத் தொடங்கி சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் மார்க்கெட்டை பிடித்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு.

 

2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

துறை: பல்துறை நிறுவனம்
வருமான: $44 பில்லியன்
தொழிலாளர்கள் எண்ணிக்கை: 24,930

இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் மற்றும் மூன்றாவது அதிக வருமானம் பெரும் நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வருமானம் $44 பில்லியன் ஆகும். மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம், இந்தியாவில் பல முன்னணி தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எரிசக்தி, பெட்ரோகெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், இயற்கை வளங்கள், சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு துறை ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

எரிசக்தி துறையில் உலக அளவில் இயங்கி வரும் 250 நிறுவனங்களில் 8வது இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஒரே ஒரு தலைமையின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம் சராசரியாக இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 20% இந்நிறுவனத்தின் பொருட்கள்தான் ஏற்றுமதியாகி வருகிறது. தொழிலாளர்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதிலும், சுகாதாரமான நிறுவனமாக உள்ளதாக விருதையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

 

1. இண்டியன் ஆயில் கார்ப்பரேசன்

1. இண்டியன் ஆயில் கார்ப்பரேசன்

துறை: எண்ணெய் மற்றும் வாயு
வருமானம்: $61 பில்லியன்
தொழிலாளர்கள் எண்ணிக்கை: 33,000

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான இந்த இண்டியன் ஆயில் கார்ப்பரேசன் என்ற இந்த நிறுவனம், இந்தியாவின் எண்ணெய் மற்றும் வாயு துறையில் தலைமையாக உள்ளது. இந்நிறுவனத்தின் வருமானம் $61 பில்லியன் ஆகும். மேலும் இதன் லாபம் $1.5 பில்லியனாகவும் உள்ளது. கடந்த 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உலக அளவில் தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. குறிப்பாக இலங்கை, மொரிஷீயச் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களிலும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலும் தனிச்சிறப்பு வாய்ந்த நிறுவனமாக உள்ளது.

ஃபார்ட்சூன் சர்வதேச பட்டியலில் இண்டியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மிகப்பெரிய இடத்தைத் தக்க வைத்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு 161வது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆசிய-பசுபிக் பகுதிகளில் நம்பர் ஒன் இடத்தையும் பெற்று பெருமை பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தொழிலாளர்கள் வேலை செய்ய சிறந்த நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்டதோடு, ஐந்தாவது மதிப்பு மிகுந்த பிராண்ட் நிறுவனமாக தி எகானமிக் டைம்ஸ்-ஆல் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+