‘ஆதார் கார்டு’ வெற்றி அடைந்த கதையை மைக்ரோசாப்ட் சிஈஓ உடன் பகிர்ந்து கோண்ட நந்தன் நிலேகனி!
பெங்களூரில் திங்கட்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியருமான சத்ய நாதெல்லா.
அந்த நிகழ்வில் ஆதார் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய நந்தன் நிலேகனியும் பங்கேற்றார். அப்போது இரண்டு டெக் ஜாம்பவான்கள் இடையில் நடந்த உரையாடலில் பிற இண்டெர்னெட் பயன்பாடுகளைக் காட்டிலும் ஆதார் கார்டு திட்டம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றிப் பெற்றது அதன் பார்வை என்ன என்று சத்ய நாதெல்லா கேட்ட கேள்வியை அடுத்து நந்தன் நிலேகனி ஆதார் அட்டையின் பார்வை குறித்து விளக்கினார்.
வேகம் மற்றும் அளவில் கவணம்
ஆதார் கார்டு திட்டத்தை முடிவு செய்த உடன் முதலில் அதன் வேகம் மற்றும் அளவிற்கு ஏற்றவாறு வடிவமைத்தோம். வேகம் மற்றும் அளவிற்கு ஏற்றவாறு வடிவமைக்கவில்லை என்றால் இந்தத் திட்டம் தோல்வியில் முடிந்து இருக்கும்.
இரண்டு அரசியல் கட்சிகள் ஆட்சி மாற்றம்
அது மட்டும் இல்லாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயன்ற போது இரண்டு கட்சிகள் மாறி ஆட்சியைப் படித்தது. ஆனால் இரண்டு அரசுகளும் எங்களுக்கு இந்தத் திட்டத்திற்காக நல்ல ஆதரவை அளித்தன.
யார் இந்த நந்தன் நிலேகனி?
டெக் ஜாம்பவானான நந்தன் நிலேகனி இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இந்தியா தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். இப்போது அரசின் ஆலோசகராகவும் உள்ளார்.
நல்ல முன்னேற்றம் அடைந்த காலம்
ஆதார் திட்டம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தான் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றும், 5 வருடத்தில் 1 பில்லியன் இந்தியர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளதாகவும் கூறினார்.
பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்
ஆதார் செயலியை உருவாக்கும் போது நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதற்காகப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (APIs) பல விஷயங்களுக்குப் பயன்படும் வகையில் அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனிநபர் அடையாளம்
முதலில் உருவாக்கும் போது எந்த ஒரு சாதனத்தை வைத்தும் பையோமெட்ரிக் மூலமாகத் தனிநபர் அடையாளம் போன்றவற்றைப் பார்க்க மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகவும், பின்னர் வங்கிகள் மற்றும் சிம் கார்டுகளுக்கான வாடிக்கையாளர்கள் விவரங்களைப் பெறும் விதமாகவும் மாற்றி அமைத்ததாகவும் நிலேகனி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ பற்றிப் பேசிய நந்தன் நிலேகனி ஆதர் சார்ந்த வாடிக்கையாளர் விவரங்களைச் சரி பார்க்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயன்படுத்தத் துவங்கியதினால் அதன் வாடிக்கையாளர்களை வேகமாகச் சேர்க்க உதவியதாகவும் கூறினார்.
வாடிக்கையாளர் விவரங்களை எளிதாகப் பெற இயலும்
வாடிக்கையாளர்கள் விவரங்கள் பற்றி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிந்துகொள்ள முகேஷ் அம்பானி எடுத்த முயற்சியினால் அவர்களால் எளிதாக 70 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற முடிந்தது. இது முற்றிலும் ஆதார் சார்ந்த வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரி பார்க்கும் சேவையினால் தான் என்றும், இரண்டு முதல் மூன்று நிமிடத்தில் ஒரு வாடிக்கையாளரின் விவரங்களை உள்ளிட முடியும் என்றும் தெரிவித்தார்.
5 பில்லியன் சேமித்த அரசு
ஆதார் தொழில்நுட்பத்தினால் அரசு 5 பில்லியன் வரை சேமித்துள்ளது. அரசு இதனை நல்ல முறையில் பயன்படுத்தும் போது இன்னும் அதிகமான பயனை பெறும் என்றும், தனியார் துறைக்கு வாடிக்கையாளர்களை எளிதல் பெற உதவும் என்றும், நந்தன் நிலேகனி கூறினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications