ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அறிவித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றதாக அறிவித்தார்.
ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ள அனைவருக்கும் இது ஒரு மைல்கல் என்றும், ஜியோ நெட்வொர்க் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை ஜியோ உருவாக்கியுள்ளதாகவும், 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றது பெறும் மிகிழ்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முகேஷ் அம்பானி என்னவெல்லாம் கூறினார் என்று இங்குப் பார்ப்போம்.
வாடிக்கையாளர்கள்
170 நாட்களில் ஜியோ நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது.
மொபைல் இண்டெர்னெட்
மொபைல் இண்டெர்னெட் பயன்படுத்துவதில் உலகளவில் இந்தியா தான் முதல் இடம்.
விடியோ
தினமும் 5.5 கோடி மணி நேரம் ஜியோ நெட்வொக்கில் வீடியோக்களை பார்த்து வாடிக்கையாளர்கள் மகிழ்கின்றனர்.
இலவச அழைப்புகள்
ஏப்ரல்1 முதல் எல்லாக் குரல் அழைப்பு திட்டங்களிலும் ரோமிங் உட்பட எல்லா இடங்களிலும் இலவசமாக அழைக்கலாம்.
வேகம் மற்றும் வலுவாக
ஒவ்வொரு நாளும் ஜியோ நெட்வொர்க்கினை வலுவாகவும், வேகமாகவும் பயன்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
குரல் அழைப்புகள்
ஜியோ நெட்வொர்க் மூலம் தினமும் 200 கோடி நிமிடங்கள் வரை இலவசமாகக் குரல் அழைப்பி செய்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
தரவு
டிஜிட்டல் உலகைப் பொருத்த வரை தரவு தான் ஆக்சிஜன்.
வாடிக்கையாளர்கள்
ஜியோ நெட்வொர்க்கில் துவக்கம் முதல் ஒவ்வொரு நொடியும் 7 வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர்.
போட்டி நிறுவனங்கள்
அனைத்து நிறுவனங்களின் டெலிகாம் திட்டங்களையும் கவனித்து அவர்களை விட 20 சதவீதம் அதிக பயனையே ஜியோ அளிக்கும்.
ஜியோ நியூ இயர் ஆஃபர்
ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ஜியோ நியூ இயர் ஆஃபரை மார்ச் 31-க்கு பிறகும் 12 மாதங்கள் வரை தொடர்ந்து பெறுவார்கள்.
ஜியோ பிரைம் உறுப்பினர்கள்
ஜியோ பிரைம் உறுப்பினர்கள் 10 நாட்களுக்கான இந்தச் சலுகைகளை 303 ரூபாய் பேக் மூலமாக அறிமுக விலையில் 30 நாட்களுக்குப் பெற முடியும்.
யார் இந்த ஜியோ பிரைம் உறுப்பினர்கள்
மார்ச் 1 முதல் 31-ம் தேதிக்குள் 99 ரூபாய்க்கு பிரிமியம் மெம்பர்ஷிப் பெறுவதன் மூலம் மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து ஜியோ நியூ இயர் ஆஃபரை 31 மார்ச் 2018 வரை பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications