இந்திய ஐடி நிறுவனங்களிடம் பிரஷ்ஷர்கள் குறைவான சம்பளம் அளிப்பது தான் பிரச்சனை. பெரிய நிறுவனங்களும் இதையே தான் பின்பற்றுகின்றன, அதிகச் சம்பளத்தை அளிக்க விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார் பய்.
இந்திய ஐடி சேவை வழங்கும் நிறுவனங்கள் அதிகமான மென்பொருள் பொறியாளர்கள் வேலைக்கு எடுப்பதற்காகப் பிரஷ்ஷர்கள் சம்பளத்தைக் குறைக்கின்றன என்று தொழில்துறையில் அனுபவம் அதிகமுள்ள டி வி மொஹந்தாஸ் பய் கூறியுள்ளார்.
இந்திய ஐடி நிறுவனங்களிடம் பிரஷ்ஷர்கள் குறைவான சம்பளம் அளிப்பது தான் பிரச்சனை. பெரிய நிறுவனங்களும் இதையே தான் பின்பற்றுகின்றன, அதிகச் சம்பளத்தை அளிக்க விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளார் பய்.
சம்பள ஒப்பீடு
20 வருடங்களுக்கு முன்பு பிரஷ்ஷர்கள் ஐடி நிறுவனங்களில் 2.25 லட்சம் ரூபாய்ச் சம்பளமாகப் பெற்று வந்தனர். இதுவே இப்போது 3.5 லட்சம் ரூபாயாகத் தான் உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கம், விலை உயர்வு போன்றவற்றைப் பார்க்கும் போது இவர்கள் பெரிய அளவில் ஊதியத்தைக் குறைத்தே அளிக்கின்றனர்.
யார் இந்தப் பய்?
பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முதன்மை நிதி அதிகாரியாக இருந்த பய் 1994 முதல் 2006-ம் ஆண்டு வரை அங்குப் பணிபுரிந்துள்ளார்.
பய் தற்போது மனிபால் குளோபல் எஜிகேஷன் சர்வீசஸ் மற்றும் ஆரின் கேப்பிடல் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் சம்பளத்தை உயர்த்துவதுடன் டாப் ஊழியர்களின் இழப்பீட்டையும் குறைக்க வேண்டும் என்றார்.
நிறுவனங்கள் பேசிக்கொண்டு செய்வது சரியல்ல
இந்திய ஐடி நிறுவனங்கள் இப்படிச் செய்வது சரியில்லை என்றும், இதை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இரண்டு மிகப் பெரிய நிறுவனங்கள் பேசிக்கொண்டு இப்படிச் செய்வது சரியில்லை என்று கூறினார்.
திறமையுள்ளவர்களை இழக்க நேரிடும்
நாம் சம்பளத்தை உயர்த்தவில்லை என்றால் நல்ல திறமையுள்ளவர்கள் வேலைக்கு வர மாட்டார்கள் என்றும் கூறினார்.
வேலைக்கு ஆட்கள் எடுத்தல்
இவரைப் பொருத்தவரை ஐடி துறையில் அதிகப்படியான திறமை உள்ளவர்கள் இரண்டாம் கட்ட கல்லூரிகளில் இருந்து வந்தவர்களே என்கிறார்.
ஆனால் நாம் முதன்மை கல்லூரிகளில் இருந்தும் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும், இது தான் சம்பளத்தை அதிகமாக அளிப்பதற்கான சவாலாக உள்ளது என்றும் பய் கூறினார்.
பிரஷ்டர்களுக்குச் சம்பளம் அளிப்பது குறித்து ஆலோசனை
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் உள்கட்டமைப்பு, நிர்வாகம், மனித வளங்கள், வசதிகள், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான துறையில் 2006 முதல் 2011 வரை இருந்த பய், ஐடி நிறுவனங்கள் பிரஷ்டர்களுக்குச் சம்பளம் அளிப்பது குறித்து ஒன்றுக்கு ஒன்று கலந்து ஆலோசிக்கின்றன இதனால் தான் அதிகமாகப் பிரஷ்சர்கள் வேலைக்கு எடுக்கப்படாமலும், அப்படியே எடுக்கும் போது குறைவான சம்பளத்திற்கு எடுப்பதன் காரணம் என்றும், இதுவே கடந்த 7 முதல் 8 வருடங்களாகச் சம்பளம் குறைந்து வருவதற்கான காரணம் என்றார்.
சம்பளத்தில் திருப்தி இல்லாததே வேலையை விடக் காரணம்
திறன் குறைவு போன்றவற்றால் சம்பளம் உயர்த்தப்படுவதில்லை. மக்கள் வேலைக்காக ஏங்குகின்றனர். இதனால் தான் தேய்வு ஏறப்பட்டு இளைய பொறியாளர்கள் வேலையை இரண்டு மூன்று மாதங்களில் விட்டு விடுவதற்கான காரணம் என்றும், அதிகப்படியான தேய்வு ஏற்படக் காரணம் சம்பளத்தில் திருப்தி இல்லாததே என்றும் பய் கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications