நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்கும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை அளிக்கும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் முதல் முறையாக இணையும் நிறுவனம் பிளிப்கார்ட், இந்த இணைப்பின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் சேவையான Azure-ஐ பிளிப்கார்ட் முழுமையாகப் பயன்படுத்த உள்ளது.
இதனால் அமேசான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட உள்ளது.
புதிய கூட்டணி..!
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை அளிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இதற்கான அறிவிப்பை பிப்.20ஆம் தேதி பெங்களுரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓ சத்ய நாடெல்லா, பிளிப்கார்ட் குழுமத்தின் சீஇஓ பின்னி பன்சால் ஆகியோர் அறிவித்தனர்.
முதல் பணி
இக்கூட்டணியில் முதல் பணியாகப் பிளிப்கார்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட்-இன் கிளவுட் சேவையான மைக்ரோசாப்ட் அசூர்-ஐ பயன்படுத்த இருநிறுவனங்களும் முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் பரினாம வளர்ச்சி
மைக்ரோசாப்ட் அசூர் கிளவுட் பிளாட்பார்ம் உடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்திப் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தற்போதையைச் சேவையை மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல் பரினாம வளர்ச்சியை அடைய உள்ளது.
இதன் வாயிலாக இனி பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் இதுவரை கண்டிறாத ஷாப்பிங் அனுபவத்தைப் பெறப்போகிறார்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாடெல்லா தெரிவித்தார்.
உண்மையான விபரம்
கிளவுட் சேவையில் உலகளவில் முதல் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். மேலும் கிளவுட் சேவையில் அமேசான் நிறுவனத்தின் அபார வளர்ச்சியை (அதன் ஆரம்பக்கட்டத்தில்) பார்த்து மைக்ரோசாப்ட் அசூர் என்னும் கிளவுட் பிளாட்பார்ம் சேவையை அறிமுகம் செய்தது.
ஆனால் சந்தையில் வெற்றியை அடையவில்லை.
சத்ய நாடெல்லா
இந்நிலையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் சத்ய நாடெல்லா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான மைக்ரோசாப்ட் கிளவுட் சேவையை மையமாக வைத்து வர்த்தகம் செய்யத் துவங்கியது.
இதன் மூலம் கணிசமான வர்த்தகத்தை அடைந்தது.
இந்திய சந்தை
இந்நிலையில் இந்திய சந்தையில் தனது கவனத்தைத் திருப்பியுள்ள நிலையில், அமேசானுடன் வர்த்தகத்திற்காகத் தொடர்ந்து போட்டிபோட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாயிலாக இந்திய சந்தையைப் பிடிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.
யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்..?
பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு அமேசான் நிறுவனம் மிகப்பெரிய போட்டியாக இருக்கும் நிலையில், இரு நிறுவனங்களுக்குமே இது சாதகமான வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் சேவையின் வர்த்தகம் கணிசமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications