எந்த ஒரு நாடுகளிலும் இல்லாத அளவிற்குக் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் மிகவும் அதிகம். இதனை முறையாகப் பயன்படுத்தி வருகிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
எந்த ஒரு நாடுகளிலும் இல்லாத அளவிற்குக் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் மிகவும் அதிகம். இதனை முறையாகப் பயன்படுத்தி வருகிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் உலக நாடுகளில் உள்ள கிரிக்கெட் அணிகளிலும் இருக்கும் விளையாட்டு வீரர்களைப் பிரான்சைஸ் அணிகள் ஏலத்தின் மூலம் எடுத்து போட்டிகளை நடத்தி வருகிறது.
இந்தியாவில் ஐபிஎல் ஒரு விளையாட்டு போல் அல்லாமல் ஒரு திருவிழா போல நடந்தாலும், இதன் மூலம் மகிப்பெரிய அளவிலான வர்த்தகச் சந்தை உருவாகியுள்ளது.
2500 கோடி ரூபாய்
40 முதல் 50 நாட்கள் வரை நடக்கும் இந்த ஐபிஎல் போட்டிகளில் உலக நாடுகளில் இருந்து சுமார் 200க்கு மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதன் மூலம் 2015ஆம் ஆண்டில் 2,650 கோடி ரூபாயும், 2016ஆம் ஆண்டில் 2,500 கோடி ரூபாய் அளவிலான வருவாய்ப் பெறுகிறது. இதில் விளம்பர வருவாய் மட்டும் சராசரியாக 1,100 கோடி ரூபாய்.
ஜிடிபி
ஐபிஎல் போட்டிகள் முதல் முறையாகத் துவக்கப்பட்ட போது, மிகப்பெரிய அளவிலான வர்த்தகச் சந்தை உருவாகவில்லை என்றாலும், 2016ஆம் ஆண்டில் இந்திய ஜிடிபிக்கு சுமார் 1000 கோடி ரூபாய் அளவிலான பங்கீட்டை அளிக்கும் வகையில் தற்போது வளர்ந்து நிற்கிறது.
ஐபிஎல் 2017
இந்நிலையில் ஐபிஎல் 2017க்கான ஏலம் முடிந்துள்ள நிலையில், புதிதாக 66 வீரர்கள் இந்த வருட ஏலத்திற்கு வந்துள்ளனர். இதுல 39 வீரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2017ஆம் ஆண்டு ஏலத்தில் சுமார் 351 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
91.1 கோடி ரூபாய்
ஐபிஎல் 2017 ஏலத்தில் 66 வீரர்களை ஏலத்தில் எடுக்கச் சுமார் 91.1 கோடி ரூபாய் அளவிலான தொகை செலவிடப்பட்டுள்ளது. 91.1 கோடி ரூபாய் செலவு செய்ததில் அதிகத் தொகைக்கு ஏலம் போன வீரர்களைத் தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென்ஜமின் ஆன்ரூவ் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2017 ஏலத்தில் சுமார் 14.5 கோடி ரூபாய்க்கு ரெய்சிங் பூனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியால் பெறப்பெற்றுள்ளார்.
டைமல் மில்ஸ்
ராயல் சேலெஞ்சர்ஸ் பெங்களுரூ அணி இங்கிலாந்து அணியே சேர்ந்த டைமல் மில்ஸ்-ஐ 12 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
காகிசோ ரபாடா
தென் ஆப்ரிக்கா அணியைச் சேர்ந்த சிறந்த பீல்டரான காகிசோ ரபாடா-வை 5 கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
டிரென்ட் பிளவுட்
நியூசிலாந்து அணியைச் சேர்ந்த டிரென்ட் பிளவுட்-ஐ 5 கோடி ரூபாய்க்குக் கொல்கத்தா கினைட் ரெய்டர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
பேட் குமின்ஸ்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் முன்னணி வீரரான பேட் குமின்ஸ் 4.5 கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியினரால் பெற்றப்பெற்றுள்ளார்.
கிரிஸ் வோக்ஸ்
இங்கிலாந்து நாட்டு அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான கிரிஸ் வோக்ஸ் 4.25 கோடி ரூபாய்க்குக் கொல்கத்தா கினைட் ரெய்டர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ரஷித் கான்
ஆப்கானிஸ்தான் நாட்டின் 18 வயதே ஆன ரஷித் கான்-ஐ சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
கரன் ஷர்மா
ஐபில் 2017 ஏலத்தில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைக் கரன் ஷர்மா பெறுகிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியால் சுமார் 3.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
டி. நடராஜன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த டி நடராஜன் கிங்ஸ் XI பஞ்சாப் அணியினரால் சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications