கடைசில எங்களையும் வாங்க வைச்சிட்டாங்க.. புலம்பித் தள்ளும் 'ஏர்டெல்'..!

கடைசில எங்களையும் வாங்க வைச்சிட்டாங்க.. புலம்பித் தள்ளும் 'ஏர்டெல்'..!

மும்பை: இந்திய டெலிகாம் சந்தை ஐியோ அறிமுகத்திற்குப் பின் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இதில் முக்கியமானது ஐடியா-வோடபோன் இணைப்பு, ஆர்காம்-ஏர்செல் இணைப்புகள் தான். ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் போட்டியை சமாளிக்க நிறுவன இணைப்புகளிலும், நிறுவன கைப்பற்றும் பணிகளில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே 2016ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் மிகப்பெரிய அளவிலான நஷ்டத்தைச் சந்தித்த நிலையில், சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும், நாமும் ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நார்வே நாட்டு டெலிகாம் நிறுவனமான டெலிநார்-இன் இந்திய வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது ஏர்டெல்.

சாவு பயத்தைக் காட்டிடாங்க பரமா..!

ஏர்டெல்

ஏர்டெல்

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்கும் ஏர்டெல், இந்திய டெலிகாம் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தகப் போட்டிகளை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் நார்வே நாட்டு டெலிகாம் நிறுவனமான டெலிநார்-இன் இந்திய வர்த்தகமான டெலிநார் இந்தியா-வை முழுமையாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

இதற்கு இரு தரப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எவ்வளவு தொகை...?

எவ்வளவு தொகை...?

ஏர்டெல் - டெலிநார் நிறுவனங்கள் மத்தியிலான கைப்பற்றுதல் ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு என முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், இதன் மதிப்பு 6,500 கோடி ரூபாய் முதல் 7,000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டெலிநார் இந்தியா

டெலிநார் இந்தியா

தற்போதைய நிலையில் டெலிநார், இந்தியாவில் ஆந்திர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, குஜராத், உத்திர பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் மேற்கு, மற்றும் அசாம் ஆகிய 7 வட்டங்களில் டெலிகாம் சேவையை அளித்து வருகிறது.

மேலும் இந்த வட்டங்கள் அனைத்திலும் அதிகளவிலான மக்கள் தொகை இருப்பதால், இந்நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மிகப்பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்பு உள்ளதாக ஏர்டெல் நம்புகிறது.

 

அனைத்தும் ஏர்டெல் நிறுவனத்திற்கு

அனைத்தும் ஏர்டெல் நிறுவனத்திற்கு

இந்த ஒப்பந்தம் மூலம் ஏர்டெல் நிறுவனம், டெலிநார் இந்தியாவின் சொத்துக்கள் மற்றும் வாடிக்கையாளர் என அனைத்தையும் முழுமையாகக் கைப்பற்ற உள்ளது.

மேலும் இவை அனைத்தும் ஏர்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க்-இல் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீண்ட கால வளர்ச்சி

நீண்ட கால வளர்ச்சி

இந்த இணைப்பு ஏர்டெல் நிறுவனத்திற்குக் குறைந்த கால வளர்ச்சியாக இல்லாமல் நீண்ட கால வளர்ச்சியை அளிக்கும் என்பது உறுதி.

ஸ்பெக்ட்ரம்

ஸ்பெக்ட்ரம்

மேலும் டெலிநார் இந்தியாவிற்குச் சொந்தமாக 1800 மெகாஹெட்ஸ் பேன்டில் 43.4 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் உள்ளது, இதனைக் கொண்டு ஏர்டெல் நிறுவனம், ஆந்திர பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, குஜராத், உத்திர பிரதேசம் கிழக்கு, உத்திர பிரதேசம் மேற்கு, மற்றும் அசாம் ஆகிய 7 வட்டங்களில் சிறப்பான சேவையை அளிக்க முடியும்.

இதன் வாயிலாக இப்பகுதிகளில் 4ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

 

அனுமதி

அனுமதி

இந்நிலையில் இந்தக் கைப்பற்றுதல் ஒப்பந்தத்திற்குத் தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் CCI ஆகியவை அனுமதி அளிக்க வேண்டும்.

போட்டி

போட்டி

இந்திய டெலிகாம் சந்தையில் போட்டிகள் அதிகரித்துள்ள காரணத்தால் டெலிகாம் நிறுவனங்கள் நிறுவன இணைப்பு மற்றும் கைப்பற்றும் படலத்தில் இறங்கியுள்ள நிலையில், இத்துறை நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களின் வேலைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியுமா உங்களுக்கு..?

25,000 பேர் பணிநீக்கம்

25,000 பேர் பணிநீக்கம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+