திருச்சி - சென்னை தினசரி விமானச் சேவையை அறிமுகம் செய்தது ஏர் கார்னிவல்..!

ஏர் கார்னிவல் நிறுவனம் இப்போது புதிதாகத் திருச்சி-சென்னை இடையேயும் தின சரி விமானச் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏர் கார்னிவல் நிறுவனம் கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் 2016, ஜூலை 18 முதல் தனது விமானச் சேவையைக் கோயம்புத்தூர்-சென்னை இடையிலும், மதுரை சென்னை இடையிலும் சிறப்பாக அளித்து வருகின்றது.

ஏர் கார்னிவல் நிறுவனம் இப்போது புதிதாகத் திருச்சி-சென்னை இடையேயும் தின சரி விமானச் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையம்

திருச்சி சர்வதேச விமான நிலையம்

சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானச் சேவையைத் திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் எடுத்ததை அடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் மட்டும் திருச்சி- சென்னை இடையே விமானங்கள் இயக்கி வந்தன.

விமானம்

விமானம்

இப்போது ஏர் கார்னிவல் நிறுவனமும் தினமும் மூன்று முறை திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்க இருக்கின்றது. எனவே 70 பேர் அமரக் கூடிய ATR 72-500 ரக விமானத்தைக் கார்னிவல் நிறுவனம் பயன்படுத்தி வருகின்றது.

விமானச் சேவை அளிக்கப்படும் நேரங்கள்

விமானச் சேவை அளிக்கப்படும் நேரங்கள்

ஏர் கார்னிவல் நிறுவனத்தின் இணையதள விவரங்களின் படி சென்னையில் இருந்து காலை 8:05 மணிக்குப் புறப்படும் விமானம் திருச்சியை 9:10 மணிக்கு வந்து அடையும் என்றும், பின்னர்த் திருச்சியில் இருந்து 9:30 மணிக்குப் புறப்பட்டுச் சென்னையை 10:40 மணிக்கு வந்து அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகர்கள் பயன் பெறுவர்

வணிகர்கள் பயன் பெறுவர்

ஏர் கார்னிவல் நிறுவனத்தின் புதிய விமானச் சேவையைத் துவக்கி வைத்துப் பேசிய விமான, ரயில் மற்றும் சாலை பயணிகளின் தலைவர் எம் சேகரன் இந்தப் புதிய தினசரி சேவையினால் வணிகர்கள் நல்ல பயன் பெறுவர் என்றும், மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு நிறைய விமானச் சேவை அளிக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என்றும் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+