ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் பணத்தை திரும்ப எடுக்கும் முறையில் புதிய படிவங்களை அறிமுகப்படுத்தி மேலும் எளிமையாக்கியுள்ளது.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பிஎப் பணத்தை திரும்ப எடுக்கும் முறையில் புதிய படிவங்களை அறிமுகப்படுத்தி மேலும் எளிமையாக்கியுள்ளது.
பிஎப் பணத்தை திரும்பப் பெற இரண்டு மூன்று படிவங்களை நிரப்பாமல் ஒரு படிவத்தை நிரப்பினால் போதும் என்று கூறுகின்றது ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.
அது மட்டும் இல்லாமல் பிஎப் பணத்தை திரும்ப எடுக்க விரும்பும் ஊழியர்கள் புதிய படிவத்தைப் பூர்த்தி செய்து நேரடியாக வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் பணிபுரிந்த நிறுவனத்தின் சான்றொப்பம் ஏதும் இல்லாமல் ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களைச் சமர்ப்பித்தால் போது என்றும் கூறியுள்ளது.
யாரெல்லாம் இப்படி பிஎப் பணத்தை திரும்பப் பெற முடியும்..?
யுனிவர்சல் கணக்கு எண் உடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கை யாரெல்லாம் இப்படி இணைத்துள்ளார்களோ அவர்கள் இந்த புதிய விதிமுறைப்படி எளிதாக பிஎப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை அளிக்க முடிடும். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2014-ம் ஆண்டு முதல் யுனிவர்சல் கணக்கு எண்ணை அறிமுகப்படுத்தியது.
ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?
பிஎப் சந்தாதார்கள் தங்களது பிஎப் கணக்குடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கை இணைக்கவில்லை என்றால் அதற்கு இன்னொரு படிவத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்தப் படிவத்தை சமர்ப்பிக்கும் போது நிறுவனத்தின் சான்றொப்பம் தேவைப்படும்.
ஆதார் கட்டாயம்
பிஎப் சந்தாதார்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் ஆதார் அட்டைக் கண்டிப்பாக தேவை எனக் கூறுகின்றது வருங்கால வைப்பு நிதி அமைப்பு. பிஎப் அலுவலகம் அன்மையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் பிஎப் சந்தாதார்கள் என அனைவரும் 2017, மார்ச் 31 -ம் தேதிக்குள் கண்டிப்பாக ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பிஎப் எதற்காக
பிஎப் ஓய்வூதிய காலத்திற்கான ஒரு சேமிப்பு திட்டம். நிதி ஆலோசகர்கள் பிஎப் பணத்தை இடையில் திரும்பப் பெற ஒருபோதும் ஆலோசனை வழங்க மாட்டார்கள். பிஎப் விதிகளின் படி 12 சதவீதம் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்தும் அதற்கு நிகராக நிறுவனங்களின் பங்காகவும் அளிக்கப்படும். ஆனால் 8.33 சதவீதம் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கு அளிக்கப்படும்.
வட்டி விகிதம்
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓவ்வொறு வருடமும் பிஎப் பணத்திற்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும்.
பிஎப் தொகையை பகுதியாக எந்தச் சூழலில் திரும்பப் பெற முடியும்..?
பிஎப் சந்தாதார்கள் ஏதேனும் மருத்துவச் செலவுக்காக மற்றும், திருமணம், குழந்தைகள் கல்வி, வீடு கட்டும் பணி போன்றவற்றுக்கு பகுதி தொகையை மட்டும் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
எப்போது முதல் பிஎப் பணத்தை பகுதியாக எடுக்க முடியும்..?
பிஎப் தொகையை பகுதியாக திரும்பப் பெறுதல், கடன் பெறுதல் போன்றவற்றுக்குக் குறைந்தபட்ச காலமான 5 வருடத்தைக் கடந்த இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வீட்டுக் கடன் பெறக் குறைந்தது ஐந்து வருடம் பிஎப் கணக்கில் பண வரவு வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இணைய வசதி எப்போது முதல்
பிஎப் தொகையை இணையதளம் மூலமாக மே மாதம் முதல் எளிதாக சில மணி நேரங்களில் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
பிஎப் பணத்தை இடையில் மொத்தமாக எப்போது பெற முடியும்..?
ஒரு நிறுவனத்தில் இருந்து பணிபுரிந்து வெளியேறிய பிறகு இரண்டு மாதங்கள் கழித்து பிஎப் பணத்தை இடையில் மொத்தமாகப் பெற முடியும்.
புதிய படிவம்
வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ள புதிய பிஎப் தொகை எடுக்கும் படிவத்தை பதிவிறக்க இங்கு கிளிக் செய்க.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications