ஏரியும் நெருப்பில் எண்ணெய்.. 'இன்போசிஸ்' சிஓஓ பிரவின் ராவ்-க்கு சம்பள உயர்வு..!

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் முழுநேர தலைவரான யூ.பி.பிரவின் ராவ்-க்கு இன்போசிஸ் நிர்வாகம் சம்பள உயர்வை அளித்துள்ளது.

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் முழுநேர தலைவரான யூ.பி.பிரவின் ராவ்-க்கு இன்போசிஸ் நிர்வாகம் சம்பள உயர்வை அளித்துள்ளது.

ஏற்கனவே இன்போதில் நிர்வாகத்திற்கும், நிறுவனர்களுக்கும் வாய்க்கா தகராறு.. இத்தகைய சூழ்நிலையில் சிஓஓ பிரவின் ராவ்-க்கு சம்பள உயர்வு அவசியமா..? சம்பள உயர்வுக்கு நிறுவனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதா..?

புதிய இணை இயக்குனர்

புதிய இணை இயக்குனர்

மும்பை பங்குச்சந்தையிக்கு இன்போசிஸ் நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில், பங்குதாரர்களின் ஒப்புதல்களோடு தனிப்பட்ட நிர்வாகத் தலைவராகவும், இணை இயக்குனராகவும் டி.என்.பிராலாட் அவர்களை நிர்வாகம் நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தது.

டி.என்.பிராலாட்

டி.என்.பிராலாட்

டி.என்.பிராலாட் அவர்களின் நியமனம் குறித்த முடிவு அக்டோபர் 14, 2016 ஆண்டில் நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

புதிய பிரச்சனை

புதிய பிரச்சனை

ஏற்கனவே நிறுவனத்தில் பிரச்சனை தலைக்கு மேல் இருக்கும் நிலையில், இன்போசிஸ் நிர்வாகம், அதன் தலைமை செயல் அதிகாரியான யூ.பி.பிரவின் ராவ் அவர்களின் சம்பளத்தை உயர்த்த அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இதுவரை இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் குழு எவ்விதமான கேள்விகள் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தில் அப்படி என்னதான் பிரச்சனை..?

 

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா நியமனமே மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கிய நிலையில், விஷால் சிக்காவிற்குக் கடந்த நிதியாண்டில் அளிக்கப்பட்ட அதிகப்படியான சம்பளம் குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் இதன் நிறுவனர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் சில வாரங்களுக்கு முன்பு கடுமையான வாக்குவாதம் நிலவியது.

இந்தப் பிரச்சனை கடந்த வருடமே எழுந்த நிலையில், தற்போது மிகப்பெரியதாக வெடித்துள்ளது.

 

49 கோடி சம்பளம்

49 கோடி சம்பளம்

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓவிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் 49 கோடி ரூபாய் சம்பளத்திற்கு நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இந்தச் செய்தி இந்திய ஐடித்துறை மத்தியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது நாம் மறந்திருக்க முடியாது.

இது தான் பிரச்சனை

இது தான் பிரச்சனை

உண்மையில் சம்பளம் உயர்த்தியது பிரச்சனை இல்லை, பணமாகக் கொடுக்கப்படும் சம்பளம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் செயல்திறனுக்கு ஏற்ப அளிக்கப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பங்குகளின் அளவு தான் தற்போது அதிகரித்துள்ளது.

இதுவே தற்போது நிறுவனர்கள் எழுப்பியுள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.

 

வேலை நீக்க ஊதியம்

வேலை நீக்க ஊதியம்

இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவாரான நாராயணமூர்த்திக் கூறுகையில், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சட்ட மற்றும் இணக்கப் பரிவின் தலைவர் டேவிட் கென்னடி பணியில் அமர்த்தியபோது நிறுவனர்கள் யாரும் அதுகுறித்துக் கேள்வி எழுப்பவில்லை, ஆனால் அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய போது severance pay 12 மாதம் அளிக்கப்பட்டது ஏற்புடையதல்ல.

பொதுவாக இன்போசிஸ் நிறுவனத்தில் 3 மாதம் மட்டுமே severance pay அளிக்கப்படும்.

 

ராஜீவ் பன்சால்

ராஜீவ் பன்சால்

டேவிட் கென்னடி-ஐ போலவே நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால் வெளியேறிய போது அவருக்கு 30 மாத severance pay அளிக்கப்பட்டது.

இது இயல்பான அளவுகளை விடவும் 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெரும் தொகை அளிக்க என்ன காரணம் என்ற கேள்வியைத் தான் எழுப்பியுள்ளோம் என்று கூறினார்.

 

விவாத நிலையில் உள்ளது

விவாத நிலையில் உள்ளது

இன்போசிஸ் நிறுவனத்தில் நிலவும் பிரச்சனைகளால் இதன் ஊழியர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை அனைத்துத் தரப்பு மத்தியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தற்போது விவாதம் மற்றும் ஆலோசனை அளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நாராயண மூர்த்தி ஆதிக்கம்

நாராயண மூர்த்தி ஆதிக்கம்

இன்போசிஸ் நிறுவனத்தின் ஆஸ்தான நிறுவனர்கள் இந்நிறுவனத்தில் வெறும் 12.75 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர். இதில் நாராயண மூர்த்தி அதிகப்படியான அளவு அதாவது 3.44 சதவீத பங்குகளைக் கொண்டு நிறுவனர்கள் குழுவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ஆர். சேஷசாயி

ஆர். சேஷசாயி

இந்நிலையில் மொத்த நிர்வாகமும் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் சேர்மேன் ஆர். சேஷசாயி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து முடிவுகளில் ஆர். சேஷசாயி தலைமையிலான குழு ஆதிக்கம் செலுத்தும். இங்குத் தான் பிரச்சனை துவங்கியது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+