பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஸ்பஸ் ஜெட் நிறுவனம் 777 ரூபாயில் ‘லக்கி 7 சேல்’ என்ற பெயரில் விமான ஆஃபர்களை அறிவித்துள்ளது.
பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஸ்பஸ் ஜெட் நிறுவனம் 777 ரூபாயில் 'லக்கி 7 சேல்' என்ற பெயரில் விமான ஆஃபர்களை அறிவித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட்டின் இந்தக் குறைந்த காலச் சலுகை ஆஃபரில் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
லக்கி 7 சலுகை திட்டம்
லக்கி 7 சலுகை திட்டம் மூலமாக 2017, பிப்ரவரி 9 ம் தேதி வரை ட்க்கெட்களை புக் செய்யலாம். மேலும் இந்தச் சலுகை விலை ஆஃபர்கள் மூலம் 2017 மார்ச் 9 முதல் ஏப்ரல் 13 வரையிலான பயணங்களுக்கான டிக்கெட்களை மட்டுமே புக் செய்ய முடியும்.
ஒரு வழிப்பாதை பயணத்திற்கு மட்டுமே
இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் ஒரு வழிப்பாதை பயணத்திற்கு மட்டுமே ஆகும். இதே போன்ற ஆஃபர்களை ஏர் இந்தியா, இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
ஸ்பைஸ் ஜெட்
ஸ்பைஸ் ஜெட் இணையதளத்தில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்ல 1,036 ரூபாய் டிக்கெட் கட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இண்டிகோ ஆஃபர்
இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல 777 ரூபாய் என விமான டிக்கெட்டினை அறிவித்துள்ளது.
பிற வழித்தடங்களில் இண்டிகோ ஆஃபர்
அகர்தலா-கவுகாத்தி 877 ரூபாய் எனவும், விசாகப்பட்டினம்-ஹைதெராபாத் 1,050 ரூபாய் எனவும், தில்லி-ஜெய்ப்பூர் 1,094 ரூபாய் எனவும், திருவனந்தபுரம்-கொச்சி 1,254 எனவும், கோவா-பெங்களூர் செல்ல 1228 ரூபாய் எனவும், இவை மட்டும் இல்லாமல் பிற வழித்தடங்களிலும் சலுகை விலையை அறிவித்துள்ளன.
ஏர் இந்தியா ஆஃபர்
இந்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஏற் இந்தியா நிறுவனமும் விளம்பர சலுகை விலையாக 1,099 ரூபாய்க்கு டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது.
ஜூம் ஏர்
பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஜூம் ஏர் நிறுவனம் புதிய விமானச் சேவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விமான நிறுவனங்களுக்குப் போட்டி அதிகரித்துள்ளது.
ஏர் ஏசியா இந்தியா
மேலும் இந்த ஆண்டு முதல் வெளிநாட்டு விமானச் சேவையையும் அறிமுகப்படுத்த இருக்கின்றது ஏர் ஏசியா இந்தியா.


Click it and Unblock the Notifications