ஐடி ஊழியர்களின் இந்த நிலைக்கு டிரம்ப் தான் காரணமா..? உண்மை பின்னணி என்ன..?

இந்திய ஐடி நிறுவனங்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் நடவடிக்கைகளைக் கைகாட்டி தப்பித்து வருகிறது.

பெங்களுரூ: இந்திய ஐடி நிறுவனங்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-இன் நடவடிக்கைகளைக் கைகாட்டி தப்பித்து வருகிறது.

நாட்டில் இருக்கும் முன்னணி ஐடி நிறுவனங்கள் தற்போது 2 இலக்க வளர்ச்சியில் இருந்து ஒன்றை இலக்க அளவிலான வளர்ச்சிக்குத் தள்ளப்பட்டுள்ளது, பல நிறுவனங்கள் மறுசீரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, மேலும் இந்திய ஐடித் துறையில் கல்லூரிகளில் இருந்து பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தப்படுவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.

டிரம்ப் எபக்ட் காரணமாக இந்த முக்கியமாகப் பிரச்சனைகளை இந்திய ஐடி நிறுவனங்கள் மூடி மறைத்து வருகிறது.

வர்த்தக முறை மாற்றம்

வர்த்தக முறை மாற்றம்

இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகாலமாகவே அப்ளிகேஷன் டெவலப்மென்ட் மற்றும் மெயின்டேனென்ஸ் துறையில் மட்டுமே வர்த்தகம் செய்து வருகிறது.

இது இன்றைய சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையற்றதாக மாறியுள்ளது. இதனால் காரணமாகவே பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஆர்டர் இந்தியாவை விட்டு வெளியேற்றி சென்றனர்.

 

 

புதிய டெக்னாலஜி

புதிய டெக்னாலஜி

இதன் பின்னரே இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான புதிய டெக்னாலஜிகளில் பணியாற்ற துவங்கியது.

இதன் பின்னரே இந்தியாவில் கிளவுட், மெஷின் லேர்னிங் ஆகியவற்றை கையில் எடுத்தது.

 

5 வருடம்

5 வருடம்

இது கடந்த 5 வருடமாக இந்திய ஐடி துறையில் நிலவும் பிரச்சனை தான், தற்போது டொனால்டு டிரம்ப் பிரச்சனையில் பெரியதாக வெடித்துள்ளது.

இதே காரணம் காட்டி இந்திய ஐடி நிறுவனங்கள் தப்பித்துக்கொள்கிறது.

 

 

நாஸ்காம் கருத்தரங்கு

நாஸ்காம் கருத்தரங்கு

சமீபத்தில் நாஸ்காம் அமைப்பின் கருத்தரங்கில் சர்வதேச ஆலோசனை அமைப்பான மெக்கன்னி அண்ட் கம்பனி கூறுகையில், இந்திய ஐடி நிறுவனங்களில் அடுத்த 3-4 வருடங்களில் 50 சதவீத ஊழியர்கள் தேவையற்ற பணிகளில் இருப்பார்கள்.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

நாஸ்காம் அமைப்பின் இதே நிகழ்ச்சியில் பேசிய கேப்ஜெமினி நிறுவனத்தின் சிஇஓ, இந்திய ஐடித்துறையில் இன்னும் சில நாட்களில் 60-65 சதவீத ஊழியர்கள் பயிற்சி அளிக்க முடியாதவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்.

இவர்களின் நிலை என்ன என்பதைச் சொல்ல தேவையில்லை.

 

2021இல் இன்னும் மோசம்

2021இல் இன்னும் மோசம்

இதேபோல் இந்திய ஐடி துறை குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட ஹார்சஸ் ஆஃபர் சோர்சஸ் நிறுவனம் ஐடி நிறுவனங்களில் ஆட்டோமேஷன் மூலம் 2021ஆம் ஆண்டுக்குள் சுமார் 6,40,000 லட்ச வேளைவாய்ப்புகளை இழக்க நேரிடும்.

40 லட்ச வேலைவாய்ப்புகள்

40 லட்ச வேலைவாய்ப்புகள்

ஐடி சேவை துறையில், உலகளவில் சுமார் 40 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் தற்போது இருக்கும் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் கூடிய விரைவில் தேவையற்றதாக இருக்கும்.

மேலும் மனிதர்களால் புரோகிறாம் செய்யப்படும் முறை ஆட்டோமேடிங் கோடிங் முறை மற்றும் கிளவுட் சேவைகள் மூலம் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவில் சேவை இருக்காது என ஹார்சஸ் ஆஃபர் சோர்சஸ்-இன் ஆய்வு கூறுகிறது.

 

புதிய வார்த்தை

புதிய வார்த்தை

Robotic Process Automation என்ற சொல் ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்களில் பிரபலம் அடையத் துவங்கியுள்ள நிலையில், இது இந்திய ஐடி துறை மட்டும் அல்லாது சர்வதேச சந்தைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உள்ளது.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

டெக்னாலஜி வளர்ச்சி மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறையின் வாயிலாகவே இத்துறைக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் வெடித்துள்ள நிலையில், உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்-இன் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் ஐடித்துறையின் பாதிப்பை மற்றொகு உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை

புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை

ஆட்டோமேஷன் மற்றும் கிளவுட் சேவையின் அதிகளவிலான பயன்பாட்டின் காரணமாக 2014ஆம் ஆண்டுக்குப் பின் ஐடித்துறையின் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்னும் 2 வருடங்கள் தான்

இன்னும் 2 வருடங்கள் தான்

2014ஆம் நிதியாண்டில் 2.3 லட்சமாக இருந்த புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 2017ஆம் நிதியாண்டில் 1.49 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆட்டோமேஷன் மற்றும் கிளவுட் சேவை பயன்பாட்டின் உண்மையான வெளிப்பாடு அடுத்த 2 வருடத்தில் தெரியும்.

பிரமிடு வரைமுறை

பிரமிடு வரைமுறை

ஐடித்துறையில் பல ஆண்டுகளாகப் பிரமிடு வரைமுறை பயன்படுத்தி வருகிறது. பிரமிடு அமைப்பின் அடிப்பகுதி பெரியதாக இருப்பதைப் போலவே அதிகளவிலான பிரஷ்ஷர்களை ஐடி நிறுவனங்கள் பணியில் அமர்த்தும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு தான் வாடிக்கையாளர்களிடம் ஒரு ஊழியருக்கு, ஒரு மணிநேரத்திற்கு இவ்வளவு தொகை எனக் கட்டணத்தை வசூல் செய்து ஐடி சேவையை அளித்து வருகிறது.

இதன் மூலமாக அதிகளவிலான லாபத்தைச் சந்தித்து இந்திய ஐடி நிறுவனங்கள் பெற்று வருகிறது.

 

காலம் மாறியது...

காலம் மாறியது...

மேலும் இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு மவுசு கூடியதால் 2006-07 ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகள் 1,511 ஆக இருந்த நிலையில், 2014-15ஆம் ஆண்டில் 3,345 ஆக உயர்ந்துள்ளது.

இக்கல்லூரிகளில் இருந்து பட்டம்பெற்று வரும் மாணவர்களில் வெறும் 20 சதவீதம் பேருக்கே வேலைவாய்ப்புக் கிடைக்கிறது.

 

வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டம்

இந்நிலையில் ஐடித்துறையிலும் புதிய வேலைவாய்ப்புகள் அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

புதிய ஊழியர்கள்

புதிய ஊழியர்கள்

ஆட்டோமேஷன் மற்றும் கிளவுட் சேவை பயன்பாட்டால் ஐடி துறையில் புதிய ஊழியர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்திருந்தாலும், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல், பயோடெக், நேநோடெக் எனப் பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதை மாணவர்கள் கவணிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+