ஸ்னாப்சாட் நிறுவனத்தை பதம் பார்க்க வரும் வாட்ஸ்அப்-இன் புதிய சேவை..!
சான் பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி மெசேஜிங் சேவை நிறுவனமான வாஸ்ட்அ பிப்ரவரி 20ஆம் தேதி புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய சேவையின் இத்துறையில் கொடிகட்டி பறக்கும் மற்றொரு நிறுவனமான ஸ்னாப்சாட் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக விளங்கி வருகிறது.
அப்படி என்ன சேவை..?
வாட்ஸ்அப்
மெசேஜிங் சேவை அளிக்கும் வாட்ஸ்அப் செயலியில், ஸ்டேடஸ் இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதில் நம்முடைய கருத்துக்களை, எண்ணங்களை எழுத்து வாயிலாக மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
இப்படியிருக்கும் சூழலில், ஸ்டேடஸ் பதிவிடுவதில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது வாட்ஸ். இதில் போட்டோஸ், வீடியோஸ், கிறுக்கல்கள் மற்றும் GIF போன்றவற்றைக் குறிப்பிட நேரத்திற்கு மட்டும் வைக்கப்படும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
காப்பி
இதே போன்ற சேவையை வேறு எங்கேயோ பார்த்தது போல் உள்ளதா..? நீங்கள் நினைத்தது சரி. ஸ்னாப்சாட் செயலியிலும் இதேபோன்ற சேவை உள்ளது.
பேஸ்புக் உள்ளீடு
2 வருடத்திற்கு முன்பு சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய பின் வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்னாப்சாட் நிறுவனத்தை நேரடியாக எதிர்க்கத் துவங்கியது.
அதுமட்டும் அல்லாமல் இந்த மெசேஜிங் சேவை பிரிவில் தனித்து விளங்க வேண்டும் என்று, தொடர்ந்து புதுப் புதுச் சேவைகளையும் மேம்பாடுகளையும் செயலியில் செய்து வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
புதிய சேவை
மேலும் பிப்.20 ஆம் தேதி அறிமுகம் செய்துள்ள சேவை ஸ்னாப்சாட் நிறுவனத்திற்கு நேரடியாகச் சவால் விடும் அளவிற்கு இச்சேவை அமைந்துள்ளது.
1 பில்லியன் வாடிக்கையாளர்கள்
இன்றைய நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்தில் 1 பில்லியன் மக்கள் வாடிக்கையாளராக உள்ளனர். இதில் தினமும் 60 பில்லியன் குறுஞ்செய்திகள் பகிரப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் போட்டோஸ், வீடியோஸ் மற்றும் GIF ஆகியவையும் அடக்கம்.
பாதிப்பு
வாட்ஸ்அப் நிறுவனத்தின் தொடர் மேம்பாடுகள், இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் அறிமுகம் ஆகியவை ஸ்னாப்சாட் நிறுவனத்தின் வளர்ச்சியை 82 சதவீதம் வரை குறைத்துள்ளது.
பங்குச்சந்தையில் ஸ்னாப்சாட்
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்னாப்சாட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஸ்னாப் இன்க், பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் அமைப்பிடம் ஐபிஓவிற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது.
25 பில்லியன் டாலர்
இந்த ஐபிஓ விண்ணப்பத்தில் ஸ்னாப்சாட் நிறுவனம் 3 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பட்டியலிடப்போகும் இந்நிறுவனம் சுமார் 25 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்க்கும் எனத் தெரிகிறது.
மேலும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் ஆதிக்கம் மற்றும் வளர்ச்சி சரிவின் காரணமாக இந்நிறுவனத்தின் முதலீட்டு ஈர்ப்பின் அளவுகள் குறையலாம்.
ஸ்னாப்
நியூயார்க் பங்குச்சந்தையில் ஸ்னாப் என்ற பெயரில் இந்நிறுவனம் பட்டியலிட உள்ளது.
ஈவன் ஸ்பீகெல்
26 வயதான ஈவன் ஸ்பீகெல் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் சீஇஓ ஆவார், கடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இந்நிறுவனம் புதிதாக மெசேஜிங் சேவைத் துவங்க திட்டம் தீட்டியுள்ளது. இதன் மூலம் ஸ்னாப்சாட் பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு
நியூயார்க் பங்குச்சந்தையில் இறங்கிய 90 சதவீத நிறுவனங்கள் வெற்றிக்கனியை பறித்துள்ள நிலையில், ஸ்னாப்சாட் நிறுவனத்திற்கும் வெற்றி நிச்சயம்.
இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு இது சிறப்பான வாய்ப்பாக அமையும். மேலும் குறைந்தது 1 வருடத்தில் முதலீட்டு மதிப்பு இரட்டிப்பாகும் என நம்பப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications