யார் இவர்..? இவர் செய்தது என்ன..?
இன்றைய இளைஞர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், தங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்வு செய்து அதனை அடைய எத்தனை தடைகள் வந்தாலும் சாதித்துக்காட்டும் போராடும் குணம் அதிகளவில் பார்க்க முடிகிறது. இதன் வெளிப்பாடே வெற்றியும் புகழும்..
இதனை அடைய வயது ஒரு தடை இல்லை என்று மார்க் ஜூக்கர்பெர்க் போன்ற பலர் நிருப்பித்துக் காட்டியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது விடா முயற்சியின் மூலம் சுமார் 45 லட்சம் ரூபாய்ச் சம்பாதித்துள்ளார்.
யார் இவர்..? இவர் செய்தது என்ன..?
அன்கிட் ஸ்ரீநிவாஸ்தவா
லக்னோவை சேர்ந்த அன்கிட் ஸ்ரீநிவாஸ்தவா செப்டம்பர் 2013ஆம் வருடம் தனது சகோதரனின் புதிய நோக்கியா லூமியா போனைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கும்போது இதில் உள்ள மியூசிக் பிளேயர் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது.
இதேபோன்ற ஒன்றைத் தனது ஆண்ட்ராய்டு பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்த போது அவருக்குக் கிடைத்தது ஏமாற்றம். லூமியா போனில் இருப்பது போன்ற ஒரு மியூசிக் பிளேயர் அவருக்குக் கூகிள் பிளேஸ்டோரில் கிடைக்கவில்லை.
இப்போது அவருக்கு வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது.
தேடுதலும்.. வர்த்தகமும்...
கூகிள் பிளே ஸ்டோரில் மியூசிக் பிளேயரை தேடிக்கொண்டு இருக்கும் போது, அன்கிட் ஸ்ரீநிவாஸ்தவா பல லட்ச செயலிகள் பல லட்சம் முறை டவுன்லோடு செய்யப்பட்டதைக் கண்டு வியந்தார்.
இவர் தேடுதலில் கிடைத்ததைத் தோல்வியும், இந்த வியப்பு சேர்ந்து இவர் மனதில் புதிய ஆண்ட்ராய்டு மியூசிக் பிளேயரை உருவாக்கத் தூண்டியது.
திட்டம்
லூமியா போனில் இருப்பதைப் போலவே எளிமையான பயன்பாட்டு முறை, சிறப்பான எபெக்ட், பாட்டுகளின் மேம்பாடுகளைத் தனது புதிய செயலியின் கொண்டு வர அன்கிட் திட்டமிட்டார்.
லெவலப்மென்ட் கட்டம்... தொடர் சரிவு..
புதிய ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கத் திட்டமிட்ட அன்கிட் அற்கனா அறிவையும் கற்றலை பிளாக் மற்றும் வீடியோ பதிவுகள் மூலமாகக் கற்றார். தொடர்ந்து 4-5 மாதங்களுக்குக் கற்றுக் கோடிங் செய்த அன்கிட். இதற்கான வெளிப்புற டிசைனை உருவாக்குவதில் மிகப்பெரிய தடையைச் செய்தார்.
இந்நிலையில் Dribbble என்னும் டிசைனர் குழுவில் இருக்கும் 200க்கும் டிசைனர்களிடம் பேசினார். ஆனால் ஒருவர் கூட இதற்கு முன்வரவில்லை.
இதில் என்ன கொடுமை என்றால் அன்கிட் அவர்களுக்குச் செயலி மூலம் ஈட்டும் வருமானத்தில் 40 சதவீத பங்கை அளிப்பதாகவும் கூறியுள்ளார். இருந்து இதற்கு யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்று அன்கிட் வருந்தினார்.
ப்ரிலான்சிங்
கடைசியில் 2 மாதங்களுக்கு Freelancing முறையில் செயலியின் வெளிப்புற டிசனை முடித்தார் அன்கிட். இதன் மூலம் செயலியின் கட்டுமானம் 2014 ஜூன் மாதம் முழுமையாக முடிவடைந்தது.
கூகிள் பிளே-வில் அறிமுகம் செய்ய முழுமையாகத் தயாரானது.
வருமானம்
இந்தச் செயலி பயன்படுத்தும் போது வரும் விளம்பரம், நேரடி விளம்பர வாடிக்கையாளர்கள் மூலம் அன்கிட் வருமானத்தை ஈட்டத் துவங்கினார்.
துவக்கத்தில் தினந்தோறும் வெறும் 2 அமெரிக்க டாலர் மட்டுமே வருமானமாக ஈட்டிய அன்கிட் தற்போது ஒரு நாளுக்கு 130 அமெரிக்க டாலர் வரை சம்பாதிக்கிறார்.
வெற்றி
கூகிள் பிளே-வில் அறிமுகம் செய்த முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 8000 டாலரைச் சம்பாதித்தார் அன்கிட், அதன் பின் வருடத்திற்கு 50,000 டாலர் வரை சம்பாதிக்கும் அளவிற்கு வளர்ந்தார்.
இந்தச் செயலியின் விளம்பரத்திற்காக அன்கிட் பேஸ்புக்கை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
லா மியூசிக்
2 வருடத்தில் 45 லட்சம் வருமானம் ஈட்டும் அளவிற்கு அன்கிட் ஸ்ரீநிவாஸ்தவா உருவாக்கிய செயலியின் பெயர் லா மியூசிக் (La Musique).
கால்குலேட்டர்
மேலும் அன்கிட் லா மியூசிக் மட்டும் அல்லாமல் கால்குலேட்டர் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார். இதுவும் 5 லட்சம் வரை டவுன்லோடு செய்துள்ளதாகக் கூகிள் பிளே கூறுகிறது.
லக்னோவும்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களும்..
வரலாறு, உணவு, பேஷன், இசை மற்றும் கலாச்சாரத்தைத் தாண்டி லக்னோ கடந்த சில வருடங்களாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மிகப்பெரிய சந்தையாக விளங்கி வருகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2 வருடத்தில் மட்டும் லக்னோவை தலைமையாகக் கொண்ட 56 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அமெரிக்காவின் ஏஞ்சல் பட்டியலில் இணைந்துள்ளது.
இந்தியா முழுவதும்..
இதன் மூலம் இந்தியாவில் தற்போது பெங்களுரூ, சென்னை, மும்பை, புனே, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களைத் தாண்டி ஸ்டார்ட் அப் நிறுவன கலாச்சாரம் இந்தியா முழுவதும் சென்றடைந்துள்ளது.
இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சக்தியாக விளங்கினாலும், பல நிறுவனங்கள் சரிவை சந்திப்பதால் இந்திய ஸ்டார்ட் அப் சந்தையில் மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications