பில் கேட்ஸ் முதல் முகேஷ் அம்பானி வரை..!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பால் என்பது எல்லாம் அந்தக் காலம். 20ஆம் நூற்றாண்டில் பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பால் என்பது எல்லாம் அந்தக் காலம். 20ஆம் நூற்றாண்டில் பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் மக்கள் மத்தியில் ஆண், பெண் என்ற வித்தியாசம் அதிகளவில் குறைந்துள்ளது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கார்பரேட் கலாச்சாரம் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய நாள் முதல் இதன் ஆண் பெண் வேறுபாடு அதிகளவில் குறைந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் கார்பரேட் கலாச்சாரத்தின் மூலம் நாம் இழந்தது பல, அதைப் பற்றி நாம் இப்போது பேசப்போவதில்லை.

உலக வர்த்தகச் சந்தையில் வெற்றிக்கொடியை நாட்டிய பெரிய தலைகளுக்குப் பின்னால், அதாவது முதுகெலுப்பாக இருக்கும் நபரைப் பற்றித் தான் பார்க்க போகிறோம்.

முதலில் யார்..

முதலில் யார்..

உலக வர்த்தகச் சந்தையில் வெற்றிக்கொடியை நாட்டியவர்கள் பட்டியலில் முதல் பார்க்கப்போவது பில் மற்றும் மெலின்டா கேட்ஸ்..

இந்த இடத்திற்கு இவரை விட்டா வேறு யார் இருக்க முடியும்.!

 

பில் மற்றும் மெலின்டா கேட்ஸ்

பில் மற்றும் மெலின்டா கேட்ஸ்

அமெரிக்காவை மட்டுமல்ல உலக நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆஸ்தான நிறுவனர் தான் பில் கேஸ்ட்.

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் டாப் 5 இடங்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸ்-இன் சொத்து மதிப்பு 79.7 பில்லியன் டாலர். இவரது வெற்றிக்கும், கடுமையான வளர்ச்சி பாதையை அமைத்ததில் துணை நின்றவர் இவரது மனைவி மெலின்டா கேட்ஸ்.

போர்ப்ஸ் நிறுவன ஆய்வின் படி மெலின்டா கேட்ஸின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர்.

 

வெற்றியும், பொதுச் சேவைகளும்..

வெற்றியும், பொதுச் சேவைகளும்..

90களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்வதற்கு முன் பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் சந்தித்தனர், இதன் பின் 1994ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வெளியேறிய நிலையில், இத் தம்பதியினர் ‘Bill and Melinda Gates Foundation' என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். 2018ஆம் ஆண்டுக்குள் உலகில் போலியோ பிரச்சனைகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்குடன் பல முக்கியப் பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

 

மரிசா மேயர் மற்றும் சேக் போக்

மரிசா மேயர் மற்றும் சேக் போக்

யாஹூ நிறுவனத்தின் சீஇஓவாக இருக்கும் மரிசா மேயர் சர்வதேச டெக்னாலஜி துறையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கிறார். யாஹூ நிறுவனம் பல சரிவுகளைச் சந்தித்தாலும், இதன் நிர்வாகம் மரிசா மீது நம்பிக்கையை இழக்கவில்லை.

டெக் உலகில் ஆண்களுக்கு இணையான பெண் ஒருவரைத் தேடினால் இதில் கண்டிப்பாக மரிசா இடம்பெறுவார். இத்தகைய சக்திவாய்ந்த பெண்ணின் வெற்றிக்குத் துணை நின்றவர் சேக் போக். (Zack Bogue)

 

வெற்றி தம்பதிகள்

வெற்றி தம்பதிகள்

மரிசா மேயர் யாஹூ நிறுவனத்திற்கு முன் கூகிள் நிறுவனத்தில் பணியாற்றிய போது சேக் போக்-ஐ சந்தித்து 12 டிசம்பர் 2009ஆம் ஆண்டும் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு 1 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

ஜெப் பீசோஸ் மற்றும் மெகென்சி பீசோஸ்

ஜெப் பீசோஸ் மற்றும் மெகென்சி பீசோஸ்

சர்வதேச ஈகாமர்ஸ் சந்தையைக் கட்டியாளும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ் காதல் வயப்பட்டது அமெரிக்க நாவலாசிரியர் உடன்.

ஜெப் பீசோஸ் மற்றும் மெகென்சி பீசோஸ் ஆகியோ 1992ஆம் ஆண்டுக் காதல் வயப்பட்டு அதே வருடத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

 

2 வருடங்களுக்குப் பின்

2 வருடங்களுக்குப் பின்

ஜெப் பீசோஸ் மற்றும் மெகென்சி பீசோஸ் ஆகியோருக்குத் திருமணம் முடிந்த 2 வருடத்திற்குப் பின் அமேசான் நிறுவனத்தைத் துவங்கி அதன் தலைவரானார்.

மெகென்சி பீசோஸ்

மெகென்சி பீசோஸ்

2014ஆம் ஆண்டு மெகென்சி பீசோஸ் Bystander Revolution என் மக்கள் நலனைக் காக்கும் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

இத்தம்பதிகளுக்கு 3 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

செர் வாங் மற்றும் வென்சி சென்

செர் வாங் மற்றும் வென்சி சென்

இருவருமே பெரிய தலைகள் தான்.. எச்டிசி கார்ப்ரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனரான செர் வாங், வயா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சீஇஓவான் வென்சி சென்-ஐ காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

பங்கீடு

பங்கீடு

இவர்கள் வாழ்க்கையை மட்டுமல்ல நிறுவனத்தையும் பங்குப்போட்டு கொண்டனர். எச்டிசி கார்ப்ரேஷன், வயா டெக்னாலஜிஸ் ஆகிய இரு நிறுவனத்திலுமே இருவருக்கும் பங்கு உரிமை உண்டு என்பதே இத்தம்பதியின் சிறப்பு.

முகேஷ் - நீதா அம்பானி

முகேஷ் - நீதா அம்பானி

இக்கட்டுரையில் இந்திய தம்பதி பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா..?

உலகளவில் பில் கேட்ஸ் மிகப்பெரிய பணக்காரர் என்றால் இந்தியாவில் நம்ம முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் தந்தை இவருக்கான வெற்றிப்பாதையை அமைத்துக் கொடுத்திருந்தாலும், அனில் மற்றும் முகேஷ் அம்பானி மத்தியிலான சொத்து மற்றும் வர்த்தகப் பிரிவினைக்குப் பின் மகிப்பெரிய அளவிலான வர்த்தகச் சரிவு சந்தித்தது.

இந்தச் சரிவுகளில் இருந்து மீள சில ஆண்டுகள் ஆனாலும், இதன் பின் தொடர் வளர்ச்சியை மட்டுமே சந்தித்தது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

 

நீதா அம்பானி

நீதா அம்பானி

வர்த்தகச் சரிவிலும், வளர்ச்சியிலும், நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளிலும் முகேஷ் அம்பானிக்கு முதுகெலும்பாக விளங்கினார் நீதா அம்பானி.

மேலும் நீதா அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மிகவும் அரிது..

மிகவும் அரிது..

வர்த்தகத் தம்பதிகள் உலகளவில் மிகவும் குறைவு. அப்படி இருந்தாலும் அவர்கள் நீண்ட நாள் வாழ்வில் இணைந்திருப்பது இல்லை.

இப்படி உங்களுக்குத் தெரிந்த அல்லது விருப்பான வர்த்தகத் தம்பதிகள் குறித்துக் கருத்துப் பதிவிடலாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+