சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் பிரச்சனைகள் பலவற்றுக்கும் மத்தியில் தமிழக அரசு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விமானங்களில் பயன்படுத்தும் உதிரிப்பாகங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்யும் ஏரோஸ்பேஸ் பார்க் அமைப்பதற்காகச் சுமார் 14 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அட்வான்ஸ் கம்பியூடிங் மற்றும் டிசைன் இன்ஜினியரிங் சென்டரை அமைக்கச் சுமார் 350 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.
மேக் இன் இந்தியா
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் விமான மற்றும் அதன் உதிரி பாகங்களின் தயாரிப்புத் துறை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் இத்தருணத்தில் இந்த 14 நிறுவனங்களுக்கான நிலம் ஒதுக்கீடு முதல் தமிழகத்தில் உற்பத்தி மேலும் வலிமை அடைய உள்ளது.
டிட்கோ
தமிழ்நாடு தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் அமைக்க முடிவு செய்து அதற்கான திட்டத்தை அறிமுகம் செய்து. இத்திட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருக்கும் சிப்காட் பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
14 நிறுவனம்
இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 14 நிறுவனங்களுக்குத் தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொலைநோக்கு பார்வை
இத்திட்டத்தின் வாயிலாகத் தமிழகத்தில் ஏரோஸ்பேஸ் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழக அரசு 350 கோடி ரூபாய் முதலீட்டில் அட்வான்ஸ் கம்பியூடிங் மற்றும் டிசைன் இன்ஜினியரிங் சென்டரை அமைக்க முடிவு செய்துள்ளது.
டைடல் பார்க்
மேலும் இதே ஏரோஸ்பேஸ் பார்க்கில் டைடல் பார்க் லிமிடெட் 12 ஏக்கர் அளவு கொண்ட இடத்தில் பல அடுக்க மாடி அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான கட்டுமான பணிகள் வருகிற ஜூன்-ஜூலை மாதத்திற்குள் துவங்கும் என டைடல் பார்க் நிறுவனம் தெரிவிட்டுள்ளது.
20 பில்லியன் டாலர்
மத்திய அரசு பாதுகாப்புக்காகச் செலவிடும் தொகையில் 15-20 சதவீத தொகை ராணுவ விமானங்களுக்காகச் செலவிடப்படுகிறது. இதன் மூலம் இத்தொகையின் அளவு 15-20 பில்லியன் டாலர் வரையில் இருக்கும், இந்நிலையில் விமானத் துறையின் வளர்ச்சிக்குத் தமிழகம் முக்கியப் பங்கு விகிப்பது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருவாய் பெற உள்ளது.
வேலைவாய்ப்பு
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications