வணிக வங்கி யூனியன் அமைப்புகளின் தலைமை அமைப்பான UFBU பல்வேறு கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசு எதிராகப் பிப்.28 அதாவது நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி: வணிக வங்கி யூனியன் அமைப்புகளின் தலைமை அமைப்பான UFBU பல்வேறு கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசு எதிராகப் பிப்.28 அதாவது நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஊழியர்களின் சம்பளம், வராக் கடனில் உயர் அதிகாரிகளின் பங்கீடு, பணமதிப்பிழப்புக் காலங்களில் செய்யப்பட்ட கூடுதல் பணிநேரத்திற்கு உரிய சம்பளம் எனப் பல முக்கியக் குறுக்கையை முன்வைத்து நாளை வங்கி ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் மூலம் நாளை அரசு வங்கிகள் அதன் கிளை வங்கிகள் செயல்படாது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு மத்திய நிதியமைச்சகம் செவி சாய்த்தால் நாளைய போராட்டத்தை வங்கி அமைப்புகள் கைவிடலாம்.
UFBU (united forum of bank unions) என்பது இந்தியாவில் இருக்கும் 9 முக்கிய வங்கி ஊழியர்களின் அமைப்பின் தலைமை அமைப்பாகும். இந்த 9 வங்கி அமைப்புகளும் UFBU கீழ் இயங்கி வருகிறது.
ஆனால் நாளை தனியார் வங்கிகள் எவ்விதமான தடையுமின்றி முழுமையாகச் செயல்படும்.
இந்தியாவில் தனியார் வங்கிகள் அதிகளவில் இருந்தாலும், மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துவது எப்போதுமே பொதுத்துறை வங்கிகள் தான்.
இப்படி இருக்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அவ்வப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால், இந்திய வர்த்தகச் சந்தை மட்டும் அல்லாது பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications