ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறையும்.. அதிர்ச்சி தகவல்..!

ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறையும்.. அதிர்ச்சி தகவல்..!

மும்பை: வெறும் இலவங்கள் மூலமாக மட்டுமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி முதல் ஜியோவின் இலவசங்கள் முடிவிற்கு வருவதால் ஜியோ மார்தட்டிக்கொள்ளும் 100 மில்லியன் வாடிக்கையாளர் பாதியாகக் குறையும் என முக்கிய ஆய்வு கூறுகிறது.

ஜியோவின் அறிமுகம் மற்றும் அதன் இலவச திட்டங்களால் கடுப்பான டெலிகாம் நிறுவனங்கள் இந்த ஆய்வின் மூலம் மகிழ்ச்சியை அடைந்துள்ளது.

வருமானம்

வருமானம்

இதுவரை ஜியோ நிறுவனம் தனது வர்த்தகத்தைத் துவங்கி 6 மாதங்கள் முழுமையாக முடிந்த நிலையில் ஒரு ரூபாய் கூட இன்னும் வருமானமாகச் சம்பாதிக்கவில்லை, காரணம் தொடர் இலவசம்.

இந்நிலையில் நாங்களும் இனி வருமானத்தை ஈட்டுவோம் எனத் தனது இலவசங்களை மார்ச் 31 உடன் முடித்துக்கொண்டு ஏப்ரல் 1 முதல் வருமானத்தை ஈட்டத் துவங்குகிறது ஜியோ.

 

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

ஜியோவின் 100 மில்லியன் வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் வெறும் இலவசங்களுக்காக மட்டுமே ஜியோவின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த 6 மாதத்தில் பிற டெலிகாம் நிறுவனங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் கணிசமான அளவிலேயே குறைந்துள்ளதை வைத்துக் கூறப்படுகிறது.

 

பயன்பாடு

பயன்பாடு

இந்நிலையில் இதுவரை ஜியோ நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து வாடிக்கையாளர்களும் இண்டர்நெட் சேவையை மட்டுமே ஜியோவில் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் முக்கிய வாய்ஸ் கால்களை, ஜியோவில் இலவமாக இருந்தாலும், தங்களது பிற டெலிகாம் இணைப்பில் இருந்துமட்டுமே செய்து வருகின்றனர்.

 

வந்தது பிரச்சனை

வந்தது பிரச்சனை

ஜியோ நிறுவனத்தின் சேவைகள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சரியாகக் கிடைக்காத நிலையில், மார்ச்31ஆம் தேதி முதல் இலவசங்கள் நீக்கப்படுவதால் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பாதியாகக் குறையலாம் என ஆய்வுகள் கூறுகிறது.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

அதேபோல் சில வாடிக்கையாளர்கள் ஜியோவின் சேவை நிலையானதாக இருந்தால் தனது நெட்வொர்கை முழுமையாக ஜியோவிற்கு மாற்றவும் தயாராக உள்ளனர்.

எது எப்படியோ இலவசங்கள் முடிந்த அடுத்தச் சில மாதங்களில் ஜியோவின் சாயம் வெளுக்கும். அப்போது பார்ப்போம் மக்கள் மன நிலையை.

ஆனால் ஜியோவின் கட்டணங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது பொட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் அதனைச் சார்ந்துள்ள வர்த்தகத்தில் இருந்து முற்றிலும் மாற்றுப்பட்ட வர்த்தகத்தில் இறங்கக் கடந்த சில வருடங்களாக முயற்சி செய்து வந்தது.

இதுவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்குச் சரியான வர்த்தக விரிவாக்கமாக இருக்கும் எனவும் நம்பியது.

 

புதிய நிறுவனங்கள்.. புதிய வர்த்தகங்கள்..

புதிய நிறுவனங்கள்.. புதிய வர்த்தகங்கள்..

இதன் வாயிலாக வந்ததே ரிலையன்ஸ் டிரென்ஸ், ரிலையன்ஸ் ஜூவல்ஸ், ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவை அனைத்தும். இப்புதிய வர்த்தகங்கள் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மக்களிடம் நேரடியாகச் சென்றடைந்தது.

டெலிகாம் துறை

டெலிகாம் துறை

இப்புதிய முயற்சிகள் அனைத்தும் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே செய்திருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 2.3 லட்சம் கோடி முதலீடு செய்து டெலிகாம் சந்தையில் ஜியோ என்ற பெயரில் 2016ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் இறங்கியது.

2 இலவச ஆஃபர்கள்

2 இலவச ஆஃபர்கள்

இந்திய சந்தையில் இறங்கிய சில நாட்களிலேயே அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற திட்டமிட்ட ஜியோ, அதன் அறிமுக நாளில் முதல் மார்ச் 31ஆம் தேதி வரையில் 2 இலவச ஆஃபர்களை அளித்தது.

இலவச சேவைகளின் வாயிலாக இந்நிறுவனம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

 

170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள்

170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள்

100 மில்லியன் என்றால் அறிமுக நாளில் இருந்து ஒரு நொடிக்கு 7 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது ஜியோ. இந்த மாபெரும் வளர்ச்சி முக்கியக் காரணம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு இருக்கும் நற்பெயரும், அதன் இலவசங்கள் தான்.

ஜியோவின் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 170 நாட்கள் மட்டுமே ஆனா நிலையில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

 

மார்ச் 31

மார்ச் 31

ஜியோ நிறுவனத்தின் இலவச சேவைகள் வருகிற மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் காரணத்தால் இதன் வாடிக்கையாளர்களும் மேலும் சிறப்பான சேவை அளிக்கும் விதமாகச் சந்தையில் இருக்கும் பிற டெலிகாம் நிறுவனங்களை விடவும் 20 சதவீத அதிக டேட்டா மற்றும் இலவச வாய்ஸ்கால் சேவைகளை அளிக்க முடிவு செய்தது.

குறைந்த கட்டணத்தில் சேவை

குறைந்த கட்டணத்தில் சேவை

ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ஜியோ நியூ இயர் ஆஃபரை மார்ச் 31-க்கு பிறகும் 12 மாதங்கள் வரை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மார்ச் 1 முதல் 31-ம் தேதிக்குள் 99 ரூபாய்க்குப் பிரிமியம் மெம்பர்ஷிப் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் வெறும் மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் வாயிலாக ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச வாய்ஸ்கால் சேவை, தினமும் 1 ஜிபி அதிவேக 4ஜி இண்டர்நெட் சேவைகளை 31 மார்ச் 2018 வரை பெற முடியும்.

 

10 நாட்களுக்கு மட்டுமே

10 நாட்களுக்கு மட்டுமே

பிரிமியம் மெம்பர்ஷிப் கட்டணத்தைச் செலுத்த விரும்பாத ஜியோ வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் பேக் மூலமாக 10 நாட்களுக்கான இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+