செல்லா ரூபாய் நோட்டுச் சகாப்தம் முடிந்து வரும் நிலையில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணப் பரிவர்த்தனைகளை நீங்கள் செய்யும் போது சில முக்கிய வங்கிகள் கட்டணங்கள் வசூலிக்க முடிவு செய்துள்ளன.
செல்லா ரூபாய் நோட்டுச் சகாப்தம் முடிந்து வரும் நிலையில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணப் பரிவர்த்தனைகளை நீங்கள் செய்யும் போது சில முக்கிய வங்கிகள் கட்டணங்கள் வசூலிக்க முடிவு செய்துள்ளன.
இந்த புதிய விதிகள் அனைத்தும் பணமாக பரிமாற்றம் செய்தால் மட்டுமே பொருந்தும்.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பணப் பரிவர்த்தனைகள் இலவசம் என்றும், அதில் பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது என இரண்டும் அடங்கும் என்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் தொகையைப் பொருத்துக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பட்ஜெட் 2017 தாக்கல் செய்யும் போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அதிகபட்ச பணப் பரிவர்த்தனை வரம்பை 3 லட்சமாக அறிவித்து இருக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது. இதுவே பிற கிளைகள் வாடிக்கையாளர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் மட்டுமே இலவசமாக வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். ஐசிஐசிஐ வங்கியும் எசிடிஎப்சி போன்றே ஐந்தாவது பணப் பரிவர்த்தனையில் இருந்து 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கும் முடிவில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அதிகபட்ச பணப் பரிவர்த்தனை வரம்பு எதையும் குறிப்பிடவில்லை. தனியார் வங்கி சேவையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள ஆக்சிஸ் வங்கி 5 பரிவர்த்தனைகள் இலவசம் என்றும், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பரிவத்தனை செய்யும் போது அதே 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கும் என்றும் கூறுகிறது டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த முயற்சியை வங்கிகள் எடுத்து வருவதாகவும், இன்னும் பல வங்கிகளில் செல்லா ரூபாய் நோட்டுகள் சிக்கல்களுக்குப் பிறகு பணத் தட்டுப்பாடு குறையாத நிலையில் இந்தப் புதிய முயற்சியின் மூலம் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதைக் குறைத்துப் பணத் தட்டுப்பாடு சிக்கலைத் தவிர்க முடியும் என்றும் வங்கி அதிகாரிகள் கூறுகின்றன. வங்கிகளில் பணம் எடுக்கக் கட்டுப்பாடு விதிப்பது ஏடிஎம் இயந்திரங்களில் எப்படிப் பணம் எடுக்க 5 முறை, 3 முறை எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோ அப்படி வரும் காலங்களில் குறைக்கப்படும் என்று சில வாடிக்கையாளர்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தலைவர் அஜய் வியாஸ் இது பற்றி கூறுகையில் இந்திய ரிசர்வ் வங்கி தனியார் மற்றும் பொது துறை வங்கிகளின் பண பரிவர்த்தனைக்கான கட்டணத்தை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொண்டாதாக தெரிவித்துள்ளார். எஸ்பிஐ வங்கியின் செய்தித் தொடர்பாளர் உதய் பகவத் புதிய கட்டணம் விதிக்க வேண்டும் என்று எங்களுக்கு எந்த அறிக்கையும் வரவில்லை என்று கூறியுள்ளார். தனியார் நிறுவனத்தில் நிர்வாகியான சந்திர பிரகாஷ் திவாரி செல்லா ரூபாய் நோட்டுப் பிரச்சனைகள் குறையக் குறைய அரசு ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டையும் குறைக்க முயல்கின்றது என்றும் அதற்கான ஒரு படியே இது என்றும் கூறியுள்ளார். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஏற்கனவே இப்போது உள்ள வாரம் 50,000 ரூபாய் வரை வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம் என்று இருக்கும் கட்டுப்பாட்டை மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு வரம்பு ஏதும் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்று கூறியிருக்கின்றது. டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்தால் மேலே கூறிய கட்டணங்கள் கிடையாது. அதற்குப் பதிலாக என்ஈஎப்டி, ஆர்டிஜிஎஸ் கட்டணங்கள் பொருந்தும் ஏடிஎம் கட்டணத்தை எப்படி எல்லாம் தவிர்க்கலாம்?
எச்டிஎப்சி
பரிவர்த்தனை வரம்புகள்
ஐசிஐசிஐ வங்கி
ஆக்சிஸ் வங்கி
வங்கிகளின் கூற்று
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது போன்ற கட்டுப்பாடு
ரிசர்வ் வங்கி
எஸ்பிஐ வங்கி
தனியார் நிறுவன நிர்வாகி
மார்ச் 13
முக்கிய குறிப்பு
ஏடிஎம் கட்டணத்தை எப்படி எல்லாம் தவிர்க்கலாம்?
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications