டொகோமோ நிறுவனத்திற்கு 1.17 பில்லியன் டாலர் அளிக்க ஒப்புக்கொண்டது டாடா குழுமம்..!
இந்தியாவின் டாடா குழுமம் ஜப்பானின் எண்டிடி டொகோமோ நிறுவனத்திற்கு 1.17 பில்லியன் டாலர் அளிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதனால் இரு நிறுவனங்கள் இடையே தெற்கு ஆசிய நாடுகளில் வணிகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருந்து நீண்ட கால வழக்கு சிக்கல்கள் முடிந்து சுமுகமாக விலகுகின்றன.
இதற்கான அறிவிப்புச் செவ்வாய்க்கிழமை வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும், நிக்கி தினசரி இதழ் தகவல் அளித்துள்ளது.
இது குறித்து டாடா குழுமம் மற்றும் டொகோமோ நிறுவனங்களைத் தொடர்புகொள்ளும் போது கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
கூட்டணி
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனமும், டொகோமோ நிறுவனமும் 2009-ம் ஆண்டு முதல் கூட்டு சேர்ந்து தெற்கு ஆசிய நாடுகளில் தொலைத்தொடர்பு சேவையை இணைந்து வழங்குவதற்காக ஒப்பந்தம் போட்டன.
டொகோமோவின் டீல்
டொகோமோ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து முதலில் வெளியேற முடிவு செய்ததை அடுத்து அதன் அசல் முதலீட்டைவிடப் பாதி மடங்கு அதிகமான தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று டாடா நிறுவனத்தைக் கேட்டது.
டாடா நிறுவனம் அளிக்க முன்வந்த விலை
2014-ம் ஆண்டு டொகோமோ நிறுவனம் வெளியேற முடிவு செய்த உடன் டாடா நிறுவனத்தால் அந்த நிறுவனங்களின் பங்கை வேறு நிறுவனங்களிடம் மாற்றி அளிக்க முடியாமல் 2.2 பில்லியன் டாலர் அளித்து வாங்க முடிவு செய்தது.
மத்திய வங்கி
இந்திய மத்திய வங்கி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது பங்கை முன் தீர்மானிக்கப்பட்ட விலையில் தான் விற்க வேண்டும் என்று விதியில் திருத்தம் செய்திருந்ததால் நிறுவனத்தின் கணக்கை முடக்கியது.
டொகோமோ நிறுவனத்தின் வழக்கு
இதனால் டொகோமோ நிறுவனம் லண்டன் உலக முதலீட்டாளர்களுக்கான நீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து 1.17 பில்லியன் டாலர்களை டாடா நிறுவனம் டொக்கோமோ நிறுவனத்திற்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று வெற்றிபெற்றது. மேலும் இந்தத் தொகையை டெல்லி உயர்நீதி மன்றத்தில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதனால் மத்திய வங்கி தலையிட்டது
டொகோமோ மற்றும் டாடா நிறுவனங்கள் இணைந்து நிறுவனத்தை 2009-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட போது பிற்காலத்தில் பிரிய விரும்பும் போது அப்போதைய பங்கின் சந்தை மதிப்பான 116 ரூபாய் அல்லது ஒரு நியாயமான விலைக்குப் பிறருக்கு விற்றுக்கொள்ளலாம் அல்லது தொடர இருக்கும் நிறுவனம் வங்கிக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் 2014-ம் ஆண்டு டொகோமோ நிறுவனம் வெளியேற முடிவு செய்த போது பங்கின் விலை 50 சதவீதம் சரிந்து இருந்தது. இதனால் டாடா நிறுவனத்தை 58 ரூபாய் கொடுத்து வாங்க ஆர்பிஐ அனுமதிக்கவில்லை. டொக்கோமோ நிறுவனத்திற்கு ஒரு பங்கிற்கு 23 ரூபாய் தான் அளிக்க வேண்டும் என்று ஆர்பிஐ வலியுறுத்தியது.
ஒருவேலை இதனால் வழக்கு விரைவாக முடிந்து இருக்குமா..!
ஏற்கனவே சென்ற வாரம் டாடா குழுமத்தின் புதிய தலைவரை அணில் அம்பானி சந்தித்துப் பேசியது, டாடா டொகோமோ நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாங்கலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தோம். இத்தரக்காக்கவும் இந்த வழக்கு விரைவாக முடிக்கப்பட்டு இருக்கும் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications