7வது சம்பள கமிஷன்: பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியில் மாற்றம் ஏதும் இல்லை..!
ஒரு வாரத்திற்குப் பிறகு 7வது சம்பள கமிஷனின் கொடுப்பனுவுகளுக்காக அமைக்கப்பட்ட குழு நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் புதிதாக ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்து உள்ளது என்றும் அதன்படி பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிக்கைகள் கூறுகின்றன.
கொடுப்பனுவுகளுக்கான குழுவின் தலைவரான நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா 7வது சம்பள கமிஷன் குழுவின் பயணப்படி குறித்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனவே மத்திய அரசு ஊழியர்கள் 6 வது சம்பள கமிஷனின் போது எவ்வளவு பயணப்படி பற்றார்களோ அதையே இப்போதும் பெறுவார்கள்.
7வது சம்பள கமிஷன் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.
பயணப்படி
7வது சம்பள கமிஷன் ஏற்கனவே 2016 ஜனவரி முதல் அகவிலைப்படியை 125 சதவீதமாக உயர்த்தி அறிவித்த நிலையில் எஞ்சி இருந்த பயணப்படியில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது.
வீட்டு வாடகைப்படி
ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு பெறும் தொகையாக வீட்டு வாடகைப்படியும் உண்டு, அதில் மத்திய அரசு மாற்றம் ஏதும் இல்லை என்றும் மாநகரங்களில் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வழங்கி வருவது அப்படியே தொடரம் என்றும் கூறுகின்றது.
6வது சம்பள கமிஷன்
நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையில் செயல்படும் இந்தக் குழு பரிந்துரைத்ததன் படி 6 வது சம்பள கமிஷனில் உள்ளது படியே பயணப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி தொடரும்.
அரசு ஊழியர்களின் எதிர்ப்பு
7வது சம்பள கமிஷன் குழு ஏற்கனவே உள்ள 30 சதவீத வீட்டு வாடகைப்படியை 30 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாகக் குறைக்கலாம் என்றும் பரிந்துரைத்ததை அடுத்து அரசு ஊழியர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒழிக்கப்படும் கொடுப்பனுவுகள்
சம்பள கமிஷன் இப்போது உள்ள 196 கொடுப்பனுவுகளில் 53 கொடுப்பனுவுகளை ஒழிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
திருத்தப்பட்ட கொடுப்பனுவுகள்
அனைத்து மாநிலங்களிலும் முக்கியத் தேர்தல்கள் மார்ச் 11 முதல் முடிவடையும் நிலையில் மத்திய அரசு மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகின்றது.
அரசு ஊழியர்கள்
மத்திய அரசு இந்தக் கொடுப்பனுவகள் எல்லாம் அளிப்பதன் மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications