கொத்துக் கொத்தாக வெளியேற்றப்படும் ஊழியர்கள்.. மோசமான நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..!
பெங்களுரூ: சில வருடங்களுக்கு முன்பு வரை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக விளங்கும் என்று அனைத்துத் தரப்பினராலும் நம்பப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தற்போது மிகவும் மோசமான காலத்தைச் சந்தித்து வருகிறது.
இந்தியாவில் 1000த்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது மிகப்பெரிய அளவிலான நிதி மற்றும் வர்த்தக நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
இதன் காரணமாகச் சில நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும் தருவாயில் இருந்ததாலும், ஓரளவிற்கு வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் நடுத்தர ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல 100க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
என்ன காரணம்
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது வர்த்தகச் சரிவினால் மிகப்பெரிய அளவிலான நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவன மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க முடிவுகளைச் செய்துள்ளது.
பணிநீக்கம்
தற்போது இருக்கும் வர்த்தகச் சூழ்நிலையில் தங்களது செலவுகளைக் குறைக்க இருக்கும் ஓரே வழி பணிநீக்கம் தான் என்று முடிவு செய்துள்ளது.
இதன் படி சந்தையில் இருக்கும் 6 முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளனர்.
முக்கிய நிறுவனங்கள்
ஒவ்வொரு காலாண்டிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏதேனும் ஒன்று ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்த முறையில் பணிநீக்கத்தில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளது.
ஸ்னாப்டீல் நிறுவனத்தில் துவங்கிய இப்பணிநீக்கம் தற்போது கிராப்ட்ஸ்வில்லா, யெப்மி, Tolexo ஆகிய நிறுவனங்கள் 100க்கும் அதிகமான ஊழியர்களுக்குப் பணிநீக்க ஆணையை அளித்துள்ளது.
கிராப்ட்ஸ்வில்லா
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் முன்னணி பிராம்பரிய விற்பனையாளரான கிராப்ட்ஸ்வில்லா நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறுகையில், நிறுவனத்தில் பிராடெக்ட் மற்றும் டெக்னாலஜி அணிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதேபோல் ஆப்ரேஷன்ஸ் மற்றும் மார்கெட்டிங் அணிகளில் பெரும்பாலான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். என்று தெரிவித்தார்.
முதலீடு சரிவு
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதினால் 2015ஆம் ஆண்டில் இத்துறையில் முதலீட்டு அளவுகள் 2 பில்லியன் டாலரில் இருந்து 28 சதவீதம் வரை சரிந்து 1.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இதனால் 2016ஆம் ஆண்டுத் துவக்கத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது விளம்பரங்கள், மார்கெட்டிங் செலவுகளை அதிகளவில் குறைந்ததுள்ளது.
9,000 ஊழியர்கள்
ஈகாமர்ஸ், புட்-டெக் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மட்டும் 2016ஆம் ஆண்டில் சுமார் 9,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என Xeler8 ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
டெலிகாம் நிறுவனங்கள்
சமீபத்தில் டெலிகாம் நிறுவனங்களில் கூட நிறுவன இணைப்புகளால் இந்த ஆண்டு சுமார் 25,000 ஊழியர்களை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
வேலையில்லா திண்டாட்டம்
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications