இனி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடக்கும்.. டெலிகாம் நிறுவனங்களே தயார்..!
இந்திய டெலிகாம் சந்தை மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள், வர்த்தகம், போட்டி என அனைத்துமே அதிகரித்துள்ள நிலையில், இனி ஒவ்வொரு வருடமும் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும்.
2017ஆம் வருடத்திற்கான ஏலம் வருகிற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நடைபெறும் என்றும், இதன் மூலம் நிறுவனங்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப வர்த்தகத்தை மாற்றிக்கொள்ள முடியும் என டெலிகாம் துறையின் செயலாளர் ஜேஎஸ்.தீபக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வருமானம்
ஒவ்வொரு வருடமும் ஏலம் நடத்தப்படுவதால் மத்திய அரசுக்கு ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான வருமானத்தை இதன் மூலம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அழைப்புக்குக் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வம் குறைவு
கடந்த முறை நடந்த ஏலத்தில் அலைக்கற்றையின் விலை அதிகமாக இருந்த காரணத்தால் முன்னணி நிறுவனங்கள் கூட ஏலத்தில் ஆர்வமாகப் பங்குபெறவில்லை. இதனால் இந்த முறை விலையில் மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
போட்டி
சந்தையில் நிலவும் போட்டியின் காரணமாக எவ்வளவு தொகை வைத்தாலும் டெலிகாம் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கு பெறும் என்பது சந்தை வல்லுனர்களின் கணிப்பு.
இதன் காரணமாக அலைக்கற்றை விலை குறைக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.
5ஜி சேவை
இந்தியாவில் 3ஜி மற்றும் 4ஜி சேவைகள் அறிமுகம் செய்ய மிகப்பெரிய அளவிலான காலதாமதம் ஏற்பட்டது, இதனால் சர்வதேச சந்தைகளுக்கு இணையாகத் தற்போது இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்ய இந்திய தொலைத்தொடர்பு பணிகளைச் செய்து வருகிறது.
சாம்சங்
இந்தியாவில் 5ஜி சேவை அளிப்பதற்காகச் சாம்சங் நிறுவனத்துடன் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் இணைந்துள்ளதாகச் சமுக வலைத்தளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications