மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 1 பில்லியன் டாலர் கடன் அளிக்கும் உலக வங்கி..!
மும்பை: உலக வங்கியின் தலைமை செயல் அதிகாரியான கிரிஸ்டலினா ஜார்ஜியவா ஒரு நாள் முழுவதும் மும்பை மாநகரத்தைச் சுற்றிப்பார்த்த பின்னர், இம்மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் விவசாயத் துறையின் வளரச்சிக்காகச் சுமார் 1 பில்லியன் டாலர் கடன் அளிப்பதாக அறிவித்தார்.
இந்திய ரூபாய் மதிப்பில் இது 6,600 கோடி ரூபாய், இந்தக் கடன் அடுத்த 2-3 வருடத்திற்கு அளிக்கப்படுவதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 5 வருடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் இதன் போக்குவரத்து, குடிநீர் விநியோக மற்றும் விவசாயத்திற்காகச் சுமார் 1.4பில்லியன் டாலர் கடன் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய சூழ்நிலையிக்கு ஏற்றவாறு மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்த்தகத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல இம்மாநிலத்தின் உள்ளகட்டமைப்புகளை மேம்படுத்த உலக வங்கியின் நிதி மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என இம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பண்டாவிஸ் கூறினார்.


Click it and Unblock the Notifications