பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் தற்போது அரசு வேலைவாய்ப்புகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
சென்னை: மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை இந்த வருடம் வரலாறு காணாத அளவிற்கும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையிலேயே புதிய பணியிடங்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் குறித்த அறிகுறிகை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் மத்திய அரசு, முக்கியத் துறையில் சுமார் 2.8 லட்ச ஊழியர்களைப் புதிதாகப் பணிகளில் நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!
மத்திய அரசு ஊழியர்கள்
மார்ச் 2016ஆம் ஆண்டு நிலவரத்தின் படி இந்தியா பாதுகாப்புப் படைகள் இல்லாமல் இயங்கிவரும் 55 துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 32.84 லட்சம். இதன் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டிற்குள் 35.67 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எல்லாம் ஒரு காரணமாகத் தான்.. காரணத்தைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்..
வருமானம் மற்றும் கலால் வரித் துறை..
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள 2.80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளில் 1.80 லட்சம் வேலைவாய்ப்புகள் வருமான வரித்துறை, கலால் வரித் துறை, கஸ்டம்ஸ் மற்றும் காவல் துறையில் மட்டும் அறிவிக்க உள்ளது.
இலக்கு
மத்திய அரசின் வரி வசூல் இலக்கு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு வரித் துறையில் கூடுதலாக ஊழியர்கள் அவசியமாக உள்ளது. இதன் காரணமாகவே மத்திய அரசு இக்குறிப்பிட்ட துறைகளில் மட்டும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ரயில்வே துறை
மத்திய அரசின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 2.84 லட்சத்தில் 13.31 லட்ச ஊழியர்கள் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர்.
காவல் துறை
மத்திய காவல் துறையில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை தற்போது 10.07 லட்சமாக இருக்கும் நிலையில், மார்ச் 2018ஆம் ஆண்டு இவை 11.13 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
பிற துறைகள்
இந்நிலையில், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி, அமைச்சரவை செயலகம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரகம், வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் எனப் பிற துறைகளிலும் கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.
மாணவர்கள்
இன்றைய நிலையில், பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும் அரசு வேலைவாய்ப்புகளுக்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய வாய்ப்பாக அவர்களுக்கு அமையும்.


Click it and Unblock the Notifications