ஐடி நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிணைந்த ஊழியர்கள்.. எதற்காக இந்தத் திடீர் போர்கொடி..?
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்கள், தங்களது 3 மாத நோட்டீஸ் காலத்தைக் குறைக்க வேண்டும் என இத்துறை நிறுவனங்களுக்கு எதிராக 2வது முறையாகப் போர்கொடி தூக்கியுள்ளனர் (இண்டர்நெட் போராட்டம்).
இதுமட்டும் அல்லாமல் தங்களது பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறைவான சம்பளம்.. மோசமான வளர்ச்சி..
கடந்த சில ஆண்டுகளில் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது, இதன் காரணமாகப் பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு மிகவும் குறைவான அல்லது சம்பள உயர்வே அளிக்காமல் இருந்தது.
ஐடி நிறுவனத்தின் மோசமான வளர்ச்சி காலத்திலும், மிகவும் குறைவான சம்பள காலத்திலும் ஊழியர்கள் தங்களது எதிர்கால வளர்ச்சிக்காக வேறு நிறுவனத்திற்கு மாற 3 மாத நோட்டீஸ் காலத்தைக் குறைக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு எதிராக ஐடி நிறுவனங்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
ஆன்லைன் பெட்டிஷன்
இதற்காக இந்தியா முழுவதும் ஐடி நிறுவனங்களில் இருக்கும் 3 மாத நோடீஸ் காலத்தைக் குறைக்க வேண்டும் ஊழியர்கள் அமைச்சகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். இதற்காக ஆன்லைன் பெட்டிஷன் மூலம் சுமார் 28,000த்திற்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதல் முறை..
ஐடி நிறுவனங்கள் முதல் முறையாக டிசிஎஸ் நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைத் தேவையற்ற காரணங்களுக்காக வெளியேற்றப்பட்ட காரணத்திற்காக முதல் முறையாக நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டம் செய்தனர். இதில் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2வது முறையாகப் போர்கொடி தூக்கியுள்ளனர்.
கருவி
மேலும் இந்தக் கையெழுத்துப் போராட்டத்திற்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றைப் பயன்படுத்தி அதிகளவிலான ஆதரவாளர்களை ஈர்க்க ஐடி ஊழியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
முக்கிய நிறுவனங்கள்
ஐடி கரியரில் ஆரம்பகட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு நோடீஸ் காலம் 2 மாதமாக இருந்கதாலும், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பதவிகளில் இருக்கும் ஊழியர்கள் 3 மாதங்களுக்கு அதிகமான நோட்டீஸ் காலத்தை ஐடி நிறுவனங்கள் பயன்பாட்டில் வைத்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், கேப்ஜெமினி, அக்சென்சர் மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் 3 மாத நோடீஸ் காலத்தைப் பயன்பாட்டில் வைத்துள்ளது.
மூடிய கதவுகள்
3.9 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றும் இந்தியா ஐடி நிறுவனங்களில் இந்த 3 மாத நோடீஸ் காலம் என்பது ஊழியரின் எதிர்கால வளர்ச்சியைச் சீர்குலைப்பதாக இருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத இத்துறை ஊழியர் தெரிவித்தார்.
சம்பள உயர்வு
மேலும் 2017-18 நிதியாண்டுக்கான சம்பள உயர்வு ஒன்றை எண்ணிக்கையில் மட்டுமே இருக்கும் என அனைத்துத் தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில், சம்பள உயர்விற்காக ஊழியர்கள் பிற நிறுவனங்களுக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு மாறும் நிலை உருவாகும்.
இதனை எளிமையாக்கவே ஊழியர்கள் தற்போது இந்தக் கையெழுத்துப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
டெக் மஹிந்திரா
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சந்தையில் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால், இந்தியாவில் இருக்கும் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பெரிய நிறுவனங்கள் ஊழியர்களைச் சம்பள உயர்வில் கைவைத்துள்ளது.
6 மாத சம்பள உயர்வு கட், உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது இதுதான் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தற்போது நடக்கும் கூத்து..!
ஜூலை மாதம் வரை ஒத்திவைப்பு
பொதுவாக டெக் மஹிந்திரா நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜனவரி முதல் அமலுக்குக் கொண்டு வந்து மார்ச் மாதத்தில் புதிய சம்பளத்தை அளிக்கும். ஆனால் இம்முறை ஜூலை மாதம் வரை ஒத்திவைக்க டெக் மஹிந்திரா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
6 மாத சம்பளம்
முன்பு மார்ச் மாதத்தில் அளிக்கப்படும் சம்பள உயர்வுடன் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான நிலுவை சம்பளத்தைச் சேர்த்து அளிக்கும், ஆனால் இம்முறை 6 மாதத்திற்கு அதாவது ஜூலை மாதத்தில் அளிக்கப்படும் சம்பளத்தில் நிலுவை தொகை அளிக்கப்படாது என அறிவித்துள்ளது.
உயர் அதிகாரிகள்
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் U4/P1/P2 பேண்ட் பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு 2017இன் முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் நிர்வாகக் கூட்டம் முடியும் வரை சம்பள உயர்வு அளிக்கப்படுவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என டெக் மஹிந்திரா நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதன் மூலம் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதவி உயர்வு
இந்நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களின் பதவி உயர்வு குறித்த ஆணைகள் அனைத்தும் மார்ச் 1ஆம் தேதிமுதல் துவங்கும் என்று அவை ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளதாகவும் உயர் அதிகாரிகளுக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் சம்பள உயர்வு ஜூலை மாதத்தில் தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்களில் யூனியன்
மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?



Click it and Unblock the Notifications