நாட்டின் மிகப்பெரிய தபால் சேவை அமைப்பான் இந்தியா போஸ்ட், பேமெண்ட் வங்கி சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற நிலையில் அதற்கான பணிகளை மிகப்பெரிய துரிதமாகச் செய்து வருகிறது.
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தபால் சேவை அமைப்பான் இந்தியா போஸ்ட், பேமெண்ட் வங்கி சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற நிலையில் அதற்கான பணிகளை மிகப்பெரிய துரிதமாகச் செய்து வருகிறது.
இதற்கான தொழில்நுட்ப உதவியை அளிப்பது யார் என்பதே தற்போது ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டியாக உள்ளது. காரணம் இதன் மதிப்பு 800 கோடி ரூபாய்
இந்திய தபால் துறை
இந்தியா முழுவதும் ஒவ்வொரு கிராமங்களிலும் கிளைகளைக் கொண்டு இருக்கும் தபால் துறை மூலம் இந்தியாவின் ஒவ்வொரு மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்கும் எண்ணத்தில் அடுத்தச் சில மாதங்களில் இந்திய தபால் துறை தனது பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அளிக்கும் துவங்க உள்ளது. இதன் அறிமுகம் இந்திய வங்கி சேவையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
800 கோடி ரூபாய்
இப்புதிய வங்கியின் தொழில்நுட்ப தேவையைப் பூர்த்திச் செய்யும் 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை யார் வாங்கப் போகிறார்கள் என்ற போட்டி ஹெச்பி, பிடெலிட்டி நிறுவனங்கள் மத்தியில் வலுக்கிறது.
இரு நிறுவனங்கள் முக்கியப் பங்கு
அடுத்தச் சில நாட்களில் இந்த ஆர்டர்களுக்கான ஆர்டர் இந்திய போஸ்ட் அறிவிக்க உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியில் ஹெச்பி, பிடெலிட்டி ஆகிய இரு நிறுவனங்கள் முக்கியப் பங்கு விகிப்பதாக இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
ஹெச்பி நிறுவனம்
இந்நிலையில் ஹெச்பி நிறுவனம் இன்போசிஸ் துணையுடன் இப்போட்டியில் குதித்துள்ளதால், இந்த ஆர்டரை பெறும் அதிகளவிலான வாய்ப்பு இக்கூட்டணிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிடெலிட்டி நிதி சேவை
பிடெலிட்டி நிதியியல் சேவை நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சிறப்பான நிதி சேவையை அளித்தாலும் இந்த ஆர்டர் பெறுவதற்கு அதிகளவிலான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி
ஏற்கனவே பேடிஎம் நிறுவனத்தின் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஈகாமர்ஸ் சேவைக்கு இன்போசிஸ் உதவியைப் பெற்றுள்ள நிலையில், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தைப் பெற ஹெச்பி மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
டிசிஎஸ்
இப்போட்டியில் டிசிஎஸ் நிறுவனமும் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பையோ, தகவல்களையோ டிசிஎஸ் வெளியிடவில்லை.
11 நிறுவனங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் 11 நிறுவனங்களுக்குப் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை அளிக்க உரிமம் வழங்கியுள்ளது. இதில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்று.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications