இந்தியாவில் 85 சதவீத ஊழியர்களை துரத்தி அடித்தது சீன நிறுவனம்..!
நவம்பர் மாதம் லீகோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு எழுதிக் கடித்ததில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருந்து ஓட்டுநர் இல்லா கார் தயாரிக்கும் வணிகத்தில் முதலீடு செய்து வருவதால் தீவிர பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது சீன கோடிஸ்வரர் ஜியா யூடிங் பணச் சிக்கலால் தனது நிறுவனத்தில் முதன் முறையாக 85 சதவீத இந்திய ஊழியர்களைப் பணியை வீட்டு நீக்குவதாக அறிவித்தார்.
அது மட்டும் இல்லாமல் தலைவர் பதவிகளில் இருந்து இருவர் வெளியேறியுள்ளனர். அதனால் தெற்கு ஆசிய நாடுகளில் இருந்து தங்களது நிறுவன கிளைகளை மூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
நிறுவனத்தை விட்டு வெளியேறிய இரண்டு டாப் ஊழியர்கள்
ஸ்மார்ட் மின்னணு வணிகத் தலைமை இயக்க அதிகாரி அதுல் ஜெயின் மற்றும் இணையப் பயன்பாடுகள், சேவைகள் மற்றும் உள்ளடக்கத் தலைமை இயக்க அதிகாரி தேபஷிஷ் கோஷ் இருவரும் நிறுவனத்தின் டாப் மூன்று ஊழியர்களில் இருந்து ராஜிநாமா செய்து வெளியேறியுள்ளனர்.
போட்டி நிறுவனங்கள்
சியோமி, ஓப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் விளம்பரத்திற்கு மட்டும் மாதம் 80 கோடிகள் விளம்பரம் செய்து இணையதளம் மற்றும் ரீடெய்ல் ஸ்டோர்களில் நல்ல விற்பனை செய்து வரும் நிலையில் லீகோ நிறுவனத்தால் போட்டியை சமாளிக்க முடியவில்லை.
நிறுவனரின் கடிதம்
இதனை அடுத்தே நவம்பர் மாதம் ஜியா யூடிங் தங்களது ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஓட்டுநர் இல்லா கார் பிரிவுக்கு முதலீடு செய்வதால் பணப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் அந்தக் கடிதத்தில் நிறுவனத்தை உலகளவில் பெரிதாக மாற்றப் பல முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதனால் குறைந்த அளவே உள்ள முதலீட்டால் நிறையக் கட்டுப்பாடான முடிவுகளை எடுக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ப்ளூம்பெர்க் கருத்து
ப்ளூம்பெர்க் இந்தக் கடிதம் பற்றி வெளியிட்ட செய்தியில் இந்தக் கோடிஸ்வரரின் கடிதத்தைப் பார்க்கும் பொதுக் கண்மூடித் தனமாக இவர் செய்த முதலீடுகளால் பணத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தது.
தாய் நிறுவனம்
தொழிற்துறை வல்லுநர்கள் இது குறித்துக் கூறுகையில் தற்போது லீகோ நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பணச் சிக்கலால் தனது தாய் நிறுவனத்தில் இருந்து முழுமையாக லீகோ நிறுவனம் வெளியேற முடிவு செய்துள்ளதாகவும், சீனா மற்றும் அமெரிக்காவில் மட்டும் தங்களது கவனத்தைச் செலுத்த இருப்பதாகவும் கூறுகின்றனர்.
எந்த ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்
தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் இருந்து எந்த ஊழியர்களும் வெளியேற்றப்படவில்லை, பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்களில் இருந்து மட்டுமே ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
உறுதி செய்த இந்திய அதிகாரி
லீகோ இந்தியா பிரிவின் தலைமை இயக்க அதிகாரி அலேக்ஸ் லியிடம் இது குறித்துக் கேட்டதற்கு இரண்டு மூத்த அதிகாரிகள் வெளியேறியதை உறுதி செய்தார் ஆனால் மொத்தமாகச் சந்தையை விட்டு வெளியேறுகின்றதா என்று கேட்டதற்கு இல்லை என்று மருப்புத் தெரிவித்துள்ளார்.
செல்லா ரூபாய் நொட்டு
மேலும் செல்லா ரூபாய் பிரச்சனைகளால் வர்த்தகம் ஏதும் பெரிதளவில் பாதிப்பு இல்லை என்றும் நிறுவனத்தின் முதன்மை நோக்கம் மற்றும் ஊழியர்கள் போன்றவற்றில் மாற்றம் செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஊழியர்கள்
லீகோ நிறுவனத்தில் இருந்து 85 சதவீத ஊழியர்கள் வெளியேற்றப்பட்டால் 370 பேர் வேலையை இழப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
விற்பனை
ஓப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவனங்கள் இணையதளம் மற்றும் ஆப்லைன் என்று இரண்டு பக்கமும் விற்பனையில் நல்ல இடத்தைப் பிடித்து இருக்கும் நிலையில் லீகோ இன்னும் தடுமாற்றத்திலேயே உள்ளது எனவே இந்தியாவை விட்டு நிறுவனம் வெளியேற வாய்ப்புள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவில் லீகோ பணிகள் தொடருமா?
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடும் பிரிவு மட்டும் இந்தியாவில் தற்போதைக்கு இயங்கும் என்றும் இதுவும் அமெரிக்காவின் சில பணிகள் இங்கு நடப்பெறுவதினால் தான் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications