தனியார் வங்கிகளை தொடர்ந்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை கட்டணத்தை அறிவித்தது..!

தனியார் வங்கிகளை தொடர்ந்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை கட்டணத்தை அறிவித்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனியார் வங்கிகள் பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணங்கள் விதிக்கத் துவங்கியதை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை முடிவு செய்துள்ளது.

இதனால் ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் வரம்பிற்கு அதிகமாக ஏடிஎம், மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்திப் பரிவத்தனை செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணம் எவ்வளவு மற்று வரம்புகளைக் காண தொடரவும்

கட்டணம் எவ்வளவு மற்று வரம்புகளைக் காண தொடரவும்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய இணையதளத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பணப் பரிவத்தனை கட்டணம் 50 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள ஆர்பிஐ வங்கியின் விதிகளின் படி சேமிப்புக் கணக்குகளுக்கு வங்கிகள் குறைந்தது 5 பரிவர்த்தனையை இலவசமாக அளிக்க வேண்டும்.

வங்கி கிளைகளில் இலவச பணப் பரிவர்த்தனை வரம்புகள்

வங்கி கிளைகளில் இலவச பணப் பரிவர்த்தனை வரம்புகள்

1,000 ரூபாய்க்கும் குறைவாக 2 முறையும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 2 முறையும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 10 முறையும், 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 15 முறையும் மற்றும் 1,00,000 ரூபாய்க்கு அதிகமாகப் பணப் பரிமாற்றங்கள் செய்பவர்கள் இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம். வரம்பு மீறினால் 50 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இணையதள வங்கி பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள்

இணையதள வங்கி பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள்

1,000 ரூபாய்க்கும் குறைவாக 20 முறை இலவசமாகவும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 40 முறை இலவசமாகவும், அதற்கு அதிகமான தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது முழுவதும் இலவசமாகவும் இணையதள வங்கி சேவை மூலம் பரிமாற்றம் செய்யலாம். இங்குக் கொடுக்கப்பட்ட வரம்பை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்

எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள் முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும், இதுவே அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமான முறை பணம் எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

எஸ்பிஐ வங்கியில் என்ஈஎப்டி(NEFT) பரிமாற்ற கட்டணங்கள்

எஸ்பிஐ வங்கியில் என்ஈஎப்டி(NEFT) பரிமாற்ற கட்டணங்கள்

10,000 ரூபாய் வரை என்ஈஎப்டி முறையில் இணையதள வங்கிகளில் பரிவர்த்தனை செய்யும் போது 2 ரூபாயும், வங்கி கிளையில் செய்யும் போது 2.50 ரூபாயும் வசூலிக்கப்படும். என்ஈஎப்டி முறையில் 10,000 ரூபாய் முதல் 1,00,000 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 4 ரூபாயும், இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

என்ஈஎப்டி முறையில் 1 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 12 ரூபாயும், இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

என்ஈஎப்டி முறையில் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 20 ரூபாயும் இதுவே வங்கி கிளைகளில் செய்யும் பொது 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

எஸ்பிஐ வங்கியில் ஆர்டிஜிஎஸ்( RTGS) பரிமாற்ற கட்டணங்கள்

எஸ்பிஐ வங்கியில் ஆர்டிஜிஎஸ்( RTGS) பரிமாற்ற கட்டணங்கள்

ஆர்டிகிஎஸ் முறையில் எஸ்பிஐ இணையதள வங்கி சேவை மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை 25 ரூபாயும், ஐந்து லட்சத்திற்கும் அதிகமாகச் செய்யும் போது 45 ரூபாயும் வசூலிக்கப்படும். இதுவே வங்கி கிளைகளில் செய்யும் போது 25 மற்றும் 50 ரூபாய் முறையே கட்டணமாக வசூலிக்கப்படும்.

பிற கட்டணங்கள்

பிற கட்டணங்கள்

எஸ்பிஐ வங்கி எதற்கெல்லாம் எவ்வளவு கட்டணங்கள் வசூலிக்கின்றன என்ற முழு விவரங்களை இந்த இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI to charge customers Rs 50 after 2 cash withdrawals from its branches starting April

SBI to charge customers Rs 50 after 2 cash withdrawals from its branches starting April
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X