கருப்புப் பணம் விவகாரத்தால் 7 லட்சம் போலி நிறுவனங்களை மத்திய அரசு இழுத்து மூட வாய்ப்பு..!
மத்திய அரசு கருப்புப் பணத்திற்கு அதிராக நிறைய முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் 7 லட்சம் போலி நிறுவனங்களாகப் பதியப்பட்டுக் கருப்புப் பணத்தை மாற்ற உதவியதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது.
மொத்தம் 15 லட்சம் நிறுவனங்களை ஆராய்ந்து இந்தப் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. நேரடி வரிக்கான மத்திய வாரிய மூத்த அதிகாரி அளித்த தகவலின் படி செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்த பிறகு அதிகளவு ரூபாய் நோட்டுகளை மாற்றிய போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் போலி நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டறிந்து மூடுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக நேரடி வரிக்கான மத்திய வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
போலி நிறுவனங்களாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்களைத் தீவிரமாக ஆராய்ந்து கண்டறிந்து வருவதாகவும், இந்த நிறுவனங்கள் பட்டியலை வருவாய் துறையும், நிதி அமைச்சகமும் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அது மட்டும் இல்லாமல் விரைவில் இந்த 7 லட்சம் போலி நிறுவனங்களை மூடும் பணியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications