மினிமம் பேலன்ஸ் 5,000 ரூபாய்..! இல்லை என்றால் அபராதம், வாடிக்கையாளர்களை மிரட்டும் எஸ்பிஐ..!
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் ஏப்ரல் 1 முதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அபராதம் எவ்வளவு, கணக்கில் யாரெல்லாம் எவ்வளவு இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
மெட்ரோ நகர வங்கி கிளைகளில் உள்ள வங்கி கணக்குகள்
எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 100 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
புறநகரப் பகுதிகள்
புறநகரப் பகுதிகள் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 40 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 60 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 80 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
நகர பகுதிகள்
நகரப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 25 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
கிராமப் பகுதிகள்
கிராமப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 20 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 30 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
எப்போது முதல்
எஸ்பிஐ வங்கிகளில் மேலே கூறியது போன்று ஏப்ரல் 1 முதல் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றால் அபராதங்கள் விதிக்கப்படும்.
முக்கிய குறிப்பு
மேலே கூறிய தொகைக்கு சேவை வரியும் விதிக்கப்படும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications